அடியே என்னவளே
மனசெல்லாம் நிறைந்து நின்னவளே,
திரும்பிப் பார்த்து பார்த்தே
இதயம் கொண்டுப் போனவளே…
நீ போன இடத்திலிருந்து
ஒரு புயலே மனசில் அடிச்சிதடி
நீ சிரிச்ச சிரிப்புலத் தான்
உசிரே உன்னில் கெறங்குதடி;
பார்த்த பார்வையில் மான் துள்ள
ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி
மூடாத கடலைப் போல மனசு
உன் நினைப்பிலேயே நிரைஞ்சிச்சேடி;
நீ போட்ட சொக்குப் பொடிப் பார்வையின்
சிரிப்போடு சிறுகுழியுமழகு அழகேடி
நீ காட்டுச்செடி பூப் பூத்த
மதுமயக்கத்தை விட உச்சமடி;
மன்மதனோ மதிமயக்கும் எவனோ
எப்படியோ உனை செய்துட்டாண்டி,
உன் ஒரு பார்வைக்கே என் விழிகள் பூத்து
வரம் கேட்டுக்கேட்டு வலியாய் – வலித்தேப்போனதடி;
நீ போகையில் கொண்டுப் போன என் உசிரது
நீ பார்க்கும் பாரவையிலிப்போ தஞ்சமடி,
நானிப்படி உருகி உருகிப் போகும் முன்னே – என்
உசிரப் பிச்சித் திண்ணாம கொஞ்சம் நீ திரும்பி வாடி;
பொட்டு வைத்தஉன் அழகுமுகம்
ரசிக்க ரசிக்க மின்னும்வான மின்னலோடி
அந்த நெற்றி சுற்றும் முடியழகில்
என்னை எப்படியோ முழுசா முடிஞ்சியேடி;
மூச்சுக் காற்றின் வெப்பமதில் நீ
கடந்துப் போன உன் வாசம்’ நிறைய மிச்சமடி
உன் மீண்டும் பார்க்குமொரு பார்வைக்கு என்
ஒன்றோ இரண்டோ பிறப்பு’ அத்தனைப் பெரிதொன்றுமில்லையடி;
நீ வராவிட்டாலுன் கனவில் வந்துப் பூப்பேன் பார்ப்பேன்
ஒரு பார்வையெனை பார்த்துக் கொள்ளடி
நாளை சேர்ந்து நாம் பேசிக் கொள்கையில்
இந்த ஒன்றோ இரண்டோ வரியில்’ கொஞ்சம் நீ சிரித்துக் கொள்ளடி;
ஆஹா சிரிப்போ சிரிப்போ சிரிப்பு
நீ சிரிச்சா இந்த சீவனுக்குள் ஜென்மமேழும் செத்துமடியுமடி,
அந்த சிரித்தஉன் உதட்டோரம் என் மிச்சவாழ்க்கையை
மீண்டுமொரு சிரிப்பிற்கே சேமித்து வைப்பேனடி!!
—————————————————————-
வித்யாசாகர்
அருமையான கவிதை.
மனசை கொட்டியிருக்கிறீர்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
மிக்க நன்றியும் வணக்கமும் ஐயா. காதல் பொங்கும் மனசு. கொட்டக் கிடைத்த தருணம். அவ்வளவே..
அருமை!
//பார்த்த பார்வையில் மான் துள்ள
ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி
மூடாத கடலைப் போல மனசு
உன் நினைப்பிலேயே நிரைஞ்சிச்சேடி;//
மிக அருமையான வரிகள்!
நன்றி உமா. மனதில் பிடித்த இடத்திலெல்லாம் பிறக்கிறது காதல். இடம் பார்த்து நத்தைப் போல் உள்சென்று விடுகிறது மனசு. உள்ளிருப்பதும் கவிதை வெளிப்படுவதும் இயல்பே போல்…
மன்மதனோ மதிமயக்கும் எவனோ
எப்படியோ உனை செய்துட்டாண்டி
இது இது எனக்கு ரொம்ப்ப….
பிடிச்சிருக்கு.
ரொம்ப நல்லாவே எழுதறீங்க.
ஒரு உயிர்ப்பான அன்பை மனதில் தேக்கிக் கொண்டுப் பார்க்கும் எவரின் மீது பட்ட பார்வையிலும் தன் மனதிற்கான உணர்வு காதலாகவும் வடிகிறது சுகந்தினி.
காதல் ஒரு களம். இதுபோன்றக் கவிதைகளின் பாடுபொருள்!!
//திரும்பிப் பார்த்து பார்த்தே
இதயம் கொண்டுப் போனவளே………//
உங்களின் இந்த வரிகளால் ஈர்க்கப்படுகிறேன் நான்…
என் நினைவு பெட்டகத்தை திறந்து பார்க்கிறேன்
அபப்டியா.. மகிழ்ச்சி.. நன்றி பிரவீன்..