ஓடி ஓடித் திரிகிறோம் சளைக்கவில்லை
ஒவ்வாதப் படியேறி உதவி வேண்டினோம் வருந்தவில்லை
காசுப் பணம் போனாலும் எங்கள் கால்கள தேய்ந்துப் போனாலும் – எம்
தமிழ் கேட்கும்திசையெட்டும் வியர்வை சொட்ட – எங்கள் உழைப்பிருக்கும்
உதவ நல்எண்ணம் கொண்டோர் பலரிருக்க துணிவுமிருக்கும்
தமிழுக்குப் பெருமைச் சேர்க்கப் பலர் உள்ளவரை –
காற்று வீசும்வரை கதிரவன் தோன்றும்வரை – எம் தமிழுமிருக்கும்;
அந்த தமிழெங்கள் குவைத்தின் பாலையிலும் மணக்க விழா எடுத்துள்ளோம்’
கவியரங்கம், மண்ணிசைப் பாடல்கள், ஆடல்கள் என பட்டியலிட்டுள்ளோம்’
“மண்ணிசைக் கலைவிழா-2011” என்றதற்குப் பெயர் வைத்துள்ளோம்; இன்னும் இருவாரம் பொறுத்திருந்துப் பாரீர்; அனைவரும் கூடி வாரீர்; ஒற்றுமை ஓங்க நல்ஆதரவுத் தாரீர்..
நாள்: 24.11.2011, வியாழக் கிழமை, மாலை 5 மணியளவில் துவக்கம்.
இடம்: அமெரிக்கன் சர்வதேச பள்ளிக்கூட வளாகம், மைதான் அவல்லி, குவைத்.
தொடர்பிற்கு: 97801299, 67077302
பேரன்போடும் பெருநன்றியோடும் அனைவரையும் வரவேற்று
கைகூப்பிக் காத்திருக்கும் –
உங்களன்பு வித்யாசாகர்
(வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், குவைத்)
குறிப்பு: வெளிநாட்டுல இருந்து வரணும்னு தயவுசெய்து யாரும் விமானப் பயணச் சீட்டுக் கேட்றாதீங்க..
கவியரங்கத்தில் பங்குகொள்ள விரும்புகின்றேன் அன்பு நெஞ்சங்களே! என்ன செய்ய வேண்டும் இதற்கு என்று அன்புடன் வேண்டுகின்றேன்! நன்றி! கந்தநாதன்
LikeLike
தங்களின் ஆவல் பெருமகிழ்ச்சிக்குரியது. இது வெறும் கவியரங்கம் மட்டுமல்ல, இது மாபெரும் மண்ணிசைக் கலைவிழாவாக நடைபெற உள்ளது. கவியரங்கம் ஆடல் பாடல் என் மண்மணக்கும் நிகழ்ச்சி குறித்த நிரல் நிறைவு செய்யப் பட்டுவிட்டது. தலைப்பு கொடுத்து இறுதி ஒத்திகையும் நிறைவடைந்துவிட்டன. விழாவிற்கு வெகு குறைந்த நாட்களே மீதம் உள்ளன. இனி மாற்றுதல் கடினம். தவிர ஒருவரை மட்டும் கூட்டவும் இயலாது இருவரின் தேவை வரும். பின் நேரம் கூடும், எனவே தயைகூர்ந்து அணுசரிக்க வேண்டுகிறேன். அடுத்தடுத்த மாதக் கூட்டங்களில், இரண்டாம் வெள்ளிக் கிழமைகளில் மாத கவிஞர்கள் கூட்டம் நடக்கும் அதில் வந்து கலந்துக் கொள்ளுங்கள். அடுத்த விழாவில் நிச்சயம் பங்குபெற முயற்சிப்போம்..
மிக்க அன்பும் வாழ்த்துக்களும்…
வித்யாசாகர்
LikeLike