ஈழத்தை அவள் பார்ப்பாள்; மோனா லிசா!!
பெண்களில் பேறு பெற்றவளே
பேசாமல் பேசும் ஓவியமே
சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே
நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல;
லியானர்டோ டாவின்சின் கண்களில்
பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி பிறந்தவள்.
பாரிஸ் நகரில் –
உன்னை ஒளிந்திருந்து பார்க்க நினைப்பவர்களையும்
நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே..,
அப்படி என்ன உன்னிடம் …சிறப்பு?
ஓ…..அது தானோ ….உன் புன்னகையால்
நாங்கள் கொண்ட வியப்பு…?
நீ புன்னகைக்கிறாயா…?
அல்லது காண்பவர்களுக்கு
புது மொழியை தருகிறாயா…?
ஒவியமதில் ஒளிவீசும் ஒப்பற்ற தாரகையே….
ஒப்பு கொள்கிறோம் –
உன்னை வரைந்தவர் ஓர் மாமேதையே..
நான் உன்னை வைத்து கவிதை சொல்லவா?
நீ டாவின்சியின் மூன்று வருட காதலி அல்லவா?
வரலாற்று ஜன்னல் வழி உலகமே உனை பார்குதடி
யாரைத்தான் தேடுகிறாய் இனியேனும் சொல்வாயா..?
தலைகுனிந்த தூரிகையில் –
தலை நிமிர்ந்த உன் தைரியம் கண்டேன்;
அதை உனக்கு பெரியோர்கள் ஊட்டி இருப்பார்கள்
எங்களுக்கோ பெரியார் …வந்த பின்புதான்….. அது
போதிக்கவேப் பட்டது;
நீ புத்திரசோகத்தில் இருந்த போதும்
உனை மோனா லிசா என்கிறார்கள்
எங்களையோ ! நீ மலடி சா… என்கிறார்களே;
உன் சின்ன சிரிப்பிற்காய் –
நூற்றாண்டுகளை கடந்தவள் நீ,
நாங்கள் சிரித்துக் கொண்டே –
வீதி கூட தாண்ட முடிவதில்லை..
உனை அழகாக்க –
நாற்பது அடுக்கு வண்ணங்கள் பூசினார்களாம் ..
எங்கள் மீதோ ..
வர்ணங்களை அல்லவா பூசி இருக்கிறார்கள்;
நீ காதலியா, கள்ளக்காதலியா,
கண்ணியா, கழிந்தவளா
இப்படி ஆயிரம் பட்டம் உனக்கு – ஆனால்
டாவின்சிக்கு ஓரே ஒரு பட்டம் மட்டும் தான்
சிறந்த ஓவியன் என்று, உன்னால்;
இன்னும் நீ மௌனமாக இருந்தால்
நம் மீது மேலும் மேலும் சாயம் பூசி
பண்பாடு என்று சொல்லி பயன்படுத்துவார்கள்
எழுந்து நில்; எழுச்சி கொள்; இனியேனும்
தமிழச்சி சொல் கேள்!
உன் மீது காதலை விட
எனக்கு கோபம்தான் அதிகம்
காரணம் தெரியுமா ……
இத்தாலி இளவரசியே மோனா லிசா..
உன் தேசத்துக்காரி தான்
என் சொந்தங்களை முள்வேலிக்குள் முடக்கியவள்.,
புலிக்கொடி மீது
பழிக்கொடி ஏற்றிவிட்டவள்..,
எங்கள் குலக்கொடி செங்கொடியும்
கம்பிக்குள் வாடும் என் தம்பிகளும்…
ஆயிரம் ஆயிரம் தமிழச்சிகளும் இதோ புறப்பட்டுவிட்டோம்….
இமைக்காமல் பார்த்து கொண்டிருப்பவளே’ மோனா லிசா………….
நாங்கள் இல்லாமல் போனாலும் – விரைவில் எங்கள்
தனி ஈழத்தைப் பார்க்கும் –
புண்ணியம் உனக்கு வாய்க்குமடி!!
—
கவிதாயினி ராணிமோகன்
அருமையான கவிதை.
நன்றி.
LikeLike
நன்றி
LikeLike
மிக்க நன்றி அய்யா. திருமதி ராணிமோகன் எழுத்தார்வமும் படைப்புத் திறனும் ஒருங்கேக் கொண்ட நல்ல தமிழ் பற்றாளர். இவரை இங்கே இக்கவிதையின் மூலம் அறிமுகப் படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழ் மேல் தனியா தாகம் கொண்ட இவர் மிகச் சிறந்த பாடகரும் கூட.., தமிழ் கூறும் நல்லுலகு இவரை இவரின் படைப்புக்களையும் காலத்திற்கும் தக்கவைத்துக் கொள்ளுமென்று நம்புவோம்.
திருமதி ராணிமோகன் அவர்களுக்கு மிக்க வாழ்த்துக்களும் வரவேற்பும்.. உரித்தாகட்டும்!!
LikeLike
வணக்கம் …………
திருமதி .இராணி மோகன் கவிதைஎழுத்துக்கள் என்னை மிகவும் மெய்சிலிர்க்க வைக்கின்றது …வாழ்க வளர்க
LikeLike
மிக்க நன்றி
LikeLike
Great poem…Greetings from Norway..!!!
LikeLike
thank you
LikeLike
சந்தேகம்
“ஆணவத்தை காட்டுவது ஆணின் அழகென்று”
காரணங்களின்றி கடுமையை வரவழைத்து கொள்கிறாய் சில நேரம்,
முகமூடியைக் கிழிக்க நினைத்து நீ ……
மேற்கொள்ளும் உத்திகள்
மதிப்பிழந்துப் போகின்றன!
நிசப்தப் பொழுதுகள்
எனைத் தாக்கும் போது,
மௌனம் கலைத்து, பேச முற்படுகையில்,
தோற்றேன் என நினைத்து,
ஏளன சிரிப்பில்
உன் வெற்றியை காட்டுவாய்,
தெரிந்தே மௌனத்தை கலைகிறேன் –
ஒவொரு படியாக உன்னை
மனதிலிருந்து இறக்கியபடியே…….
ராணிமோகன்
பெங்களூர்
LikeLike
ஏ கடிகார முட்களே……
தினசரி 24 முறை உறவு கொண்டும்……,
கர்ப்பம் தரிக்காத உங்கள் ரகசியத்தை,
இந்த கள்ளிப்பால் கொடுக்கும்
கருணை இல்லா மனிதர்களுக்கும் தான்,
கொஞ்சம் சொல்லுங்களேன்…….!
ராணிமோகன்
LikeLike
ப்பா…………, அபார சிந்தனை. செவிட்டில் அறைந்தாற்போலுள்ளது. வணக்கமும் வாழ்த்துக்களும்!
LikeLike
மிக்க நன்றி
தங்களின் கருத்திற்கு
LikeLike
//ஏ கடிகார முட்களே……
தினசரி 24 முறை உறவு கொண்டும்……,
கர்ப்பம் தரிக்காத உங்கள் ரகசியத்தை,
இந்த கள்ளிப்பால் கொடுக்கும்
கருணை இல்லா மனிதர்களுக்கும் தான்,
கொஞ்சம் சொல்லுங்களேன்…….//
தோழி எத்தனை வலியுடைய வரிகள் அதை இத்தனை லாவகமாக சுட்டியிருகிரீர்கள்
இதை எப்போது உணருமோ இந்த மானிடம்
பொதுமையாகதான் சொல்ல முடிகிறது பெண்மையின் வலி என்றாலும்.
உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
LikeLike
மிக்க நன்றி சாரா அவர்களே.
LikeLike