உறவுகளுக்கு வணக்கம்,
மேற்குறிய நம் காதல் கவிதைகளின் தொகுப்பிற்குரிய விமர்சனம் கீழுள்ள தனிச் சுட்டியின் வழியேக் கிடைக்கப்பெறும் புத்தகங்கள் விற்பனைக்கு எனும் பக்கத்தினோடு இணைக்கப்பட்டுள்ளது.
நம் படைப்புக்களை வாங்கிப் படிக்க எண்ணுவோர் சென்னை ஹிக்கீம்பாதம்ஸ் மற்றும் தி.நகரில் உள்ள நியூ புக் லேண்ட், புத்தகநிலையம் சென்று வாங்கிக் கொள்ளலாம். இணையம் மூலம் வாங்க எண்ணுவோர் நூலுலகம் போன்ற தளங்களில் சென்று வாங்கிப் படிக்கலாம்.
மேலும் ஓரிரு வார்த்தை உறவுகளே, ஒரு படைப்பினை வாசிப்போர் அதன்மூலம் ஈர்க்கப் படுகையில், அதை எழுதவும் அவரே அங்ஙனம் ஆட்பட்டிருப்பாரோ என்று படைப்பாளியின் நிலையை தானே எண்ணிவிடுவது இயல்பே. அவ்வழி, என் மிக்க மதிப்பிற்கும் அன்பிற்கும் உரியத் தோழி கவிதாயினி லதாராணி அவர்களும் இப்படைப்பின் வலிகளை முழுக்க எனக்கானதாகவே எண்ணி எழுதியிருக்கிறார். அது எனக்கானது என்பதைக் காட்டிலும் உலக கண்களில் பட்டுத் தெறிக்கும் அழுத்தமிகு உணர்வுகளே ஒரு படைப்பாளியின் பார்வையிலும் விழுந்து அது அவனின் வலியாகவும் வலுக்கொள்கிறது அன்றி’ அத்தனையும் தனது சொந்த அனுபவம் மட்டுமல்ல.
ஒரு இறப்பைப் பற்றி எழுத; எழுதும் படைப்பாளிக்கும் இறந்துவிட்டு வந்து எழுதும் அவசியம் இதுகாறும் நேரிடவில்லை.., அதேவேளை, இனிக்கும் சர்க்கரையை உண்டவருக்கே ருசி அறிவதுபோல், மனதின் கசப்பும் அதனால் நொந்தவருக்கே வலித்து எழுத்துக்களாயும் கொட்டுகிறதென்பதையும் இவ்விடம் நினைவில் கொள்ள வேண்டி, இறுதியாய் – வலித்த வலிகளும், மனதை அழுத்தும் நினைவுகளும் ஒருபுறமிருக்க, அதை தன் விசால மனதால் நிரப்பி மகிழ்ச்சிப் பூரிக்கவைக்கும் என் மனைவிப் போன்றோருக்கே இப்படைப்பின் கவிதைகள் சமர்ப்பணம்!!
நன்றிகளுடன்…
வித்யாசாகர்