ஆழிப்பேரலை அழித்ததன் முடிவிலும்
அடங்கா பெருநெருப்பென
அகிலம் பரப்பி வெளிச்சமாய்
அகன்று வளர்ந்தது தமிழினம்;
அடிமைத் தனமகலும் போருக்கு
உயிரையும் உதிரத்தையும் –
ஆண்டாண்டுகாலமாய் சிந்தியும்
சற்றும் ஓயாது வளர்வது தமிழினம்;
கேட்டவர், பெற்றவர், பிடுங்கிக் கொண்டவரின்
நியாயத்திற்கெல்லாம் தலைசாய்த்தும் –
தன் நடை தளராமல் உலகத் தெருவெங்கும்
கனகம்பீரமாய் வீறுநடைப் போடுவது தமிழினம்;
வீரம் பெரிது மானம் பெரிது அறிவு பெரிது
உறவுகள் பெரிது உயிர்பருகும் அன்பும் நட்பும் பெரிது
அதற்குத் தகநடக்கும் பண்பு உயிரினும் மானப் பெரிதென
என்றோ மனிதருக்கு வாழ்வினைப் போதித்தது தமிழினம்;
குடும்பம் கலாச்சாரம் கடவுள் நம்பிக்கை சுய ஆய்வு
திறன் வளர்த்தல் தீரா நம்பிக்கை ஒழுக்கம் நல்குதல்
உணர்வு பகிர்ந்து உறவு பிணைந்து ஒற்றுமைத் தீக்குச்சியில்
ஒவ்வாமை கொளுத்தலென வரையறைகளோடு வாழுமினம் தமிழினம்;
இங்ஙனம், காலக் கணக்கில் பழையதாகி
புதுமை ஏடுகளில் புது பொலிவு சேர
அடியடியாய் நகர்ந்துள்ளோம்;இனி மிச்சத்தை –
இமைபோல் காத்து இவ்வினம்
தலைநிமிர்ந்து கடக்கவே நாமும் நடைபோடுவோம்..
————————————————————
வித்யாசாகர்
வணக்கம் அண்ணா,
நம்மட தமிழ் இனம்அன்று தொடக்கம்.இன்றுவரைக்கும் வீரம் அறிவு உயிர் தியகம் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றது,என்பதை மிகத் ஆழமாக கவிதையில் சொல்லி இருக்கின்றிர்கள் அண்ணா……மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்பா, இதில் பெரிய கவிதை நயமெல்லாம் இல்லையே பதியவேண்டாமோ என்று தான் முதலில் நினைத்தேன். பின்பு யோசித்து நம்மினம் பற்றிய ஒரு கலந்தைவாக இருக்குமென்று நம்பினேன். அதை மெய்ப்படுத்தியமைக்கு நன்றியும் வாழ்த்துக்க்களும்பா..
நன்றாக இருக்கிறது…
நன்றியும் வணக்கமும் ஐயா, நலமாக உள்ளீர்களா.
“குத்தும் மீசையானாலும்
அப்பா மீசையில்லையா?” என்பது போல்; நேரில் இருந்து பேசாமல் நின்றாலும், தூர இருந்து காணாமல் இருந்தாலும், இங்கு தானே இருக்கிறீர்கள் என்றிருக்கும். இப்போது, கண்டு நாட்களான பாசம் தேடுகிறது எப்போது வருகிறீர்கள் என்று. வழிநோக்கி நிற்கிறோம். உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டிலும் உறவுகளையும் விசாரித்ததாய் சொல்லுங்கள். தம்பி அடிக்கடி வந்து போகிறான். வணக்கமும் அன்பும் ஐயா எங்களின் அனைவரின் சார்பாகவும்…
அருமை.
வாழ்த்துகள்.
நன்றி ஐயா. இடைவிட்டு வருகிறீர்களா? நலம் விசாரிப்புகளும் வணக்கமும் உரித்தாகட்டும் ஐயா!