மணமகன்: காஜா மொஹிதீன் மணமகள்: ரஹ்மத் நிஷா
திருமண நாள்: 16.05.2012
கடற்கரை மணல் குவித்து
அதில் வீடு செய்து
அந்த வீட்டிற்குள் தனக்குப் பிடித்தவள்
மனைவியாக இருப்பாள் எனில்; அந்த வீடும் சொர்கமே!
சொர்கம் என்பது
எண்ணத்தில் ஆழ விளைந்த ஏக்கங்களுக்கு சாமரம் வீசி
அதை வலிக்காமல் பிடுங்கிய வேரினிடத்தில்
சிரிப்பையும் சந்தோசங்களையும் விளைவிக்கும் சூழ்ச்சுமமெனில் –
இதோ உங்களின் சொர்கமினி உங்கள்
இதயக்கூட்டில் சிறகடிக்கும்,
சொல்லாமல் சொல்லும் கதை நூறு பேசி
கண்களால் காதலிக்கும், உதட்டு அசைவின் மாற்றத்தில்
உங்களின் இதயத்தின் கதவுகளை ஒவ்வொன்றாய்
சொர்கத்தின்பக்கம் திறக்கும், யாரென்று
எட்டிப் பார்ப்பதற்குள் உயிரின் ஆழம் வரைப் பதியும்
உயிர் பிரித்து உயிர் பிரித்து உங்கள் முகம் செய்யும்
அந்த முகத்திற்கு பெயர்வைக்கும் முன் சற்று
திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள் – அருகே அது
துணையாய் நிற்கும் உள்ளே பாதியாய் கரையும்
மனதென்னா தூரம் வரை தலைமுறைகளை வார்க்கும்
வாழ்வின் ஒவ்வொரு கணமும் இதயத் துடிப்பென
உள்ளே துடித்துக் கொள்ளும்,
வீழ்கையில் தோளாகி – சாய்கையில்
சாரலின் சிலிர்ப்பூட்டும்,
ஒரு சின்ன பாதிப்பில் பதறி வந்து
பெற்றத் தாயெனக் கட்டித் தழுவிக் கொள்ளும்
அந்த தழுவலின் இறுக்கத்தில்
ஆம்; இவள் தான் மனைவி என்று புரியும்!
இப்படி சொல்லச் சொல்ல சலிக்காத பெருமை பல பாடு,
போற்றுமுலகு போற்றும் நீ நம்பி இரு கை சேரு,
செல்வம் பல பெற்று மங்காப் புகழோடு நீயும்
பார் போற்ற வாழு,
பெற்ற மனசிரண்டும் குளிர, பார்க்கும் நெஞ்சங்கள் மகிழ
நலமான வாழ்வை எழிலான உலகத்தின்
திக்கெட்டிலும் தீரு; நீ தீரா ‘உன் பரம்பரைப் பேர்சொல்லி’
உன் சந்ததிகள் போற்றும் நன்னாளாக இந்நாள் விளங்க வாழு..
அதற்கென் மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்!!
சகோதரத்துவத்துடன்..
_வித்யாசாகர்
அருமை.
வாழ்த்துகள்.
LikeLike
நன்றி ஐயா. உங்களின் வாழ்த்தில் சிறக்கட்டும் அவரின் வாழ்வு..
LikeLike