ஒரு காலதவத்தின் வரம்
கடவுள் கற்பிக்கும்
கடவுளர் குணம்; காற்றின் அசைவிற்கும்
காரணம் புரிவிக்கும் பலம்; ஒழுக்கம்!
உண்மை நேர்மை கண்ணியத்தின்
வெளிப்பொருள், மானுடப் பூச்சிக்கு முளைக்கும்
மனித சிறகு; மாந்தரின் அஞ்ஞானத்தை
மனிதம் வலிக்காமலகற்றும் பெருவழி; ஒழுக்கம்!
விலங்கின்
ரத்தம் சொட்டும் நாக்கிலும் மதிப்பூறும்
உயர்ந்த மனித வாசம்; மானுடத்தின் பெருமித
பிறப்பின் அடையாளம்; ஒழுக்கம்!
கல்லின் உயிரையும்
கடவுளின் உண்மையையும் அகக்கண்ணில்
அறிவிக்கும் ஞான திடம்; உயிருள்ள
இடம்நோக்கி மனிதம் பாய்ச்சும் ரதம்; ஒழுக்கம்!
அறிவின் வெளிச்சத்தை அதிகமாக்கி
அடுத்தவர் நலன்குறித்தும் அனைத்துலக
நன்மை குறித்தும் நடுநிலையோடு சிந்திக்கவைக்கும்,
நல்லது கெட்டதை இது இதுவென்று காட்டும்; ஒழுக்கம்!
மிருகத்து புத்தி மாற்றி மனித அறிவின்
தெளிவில் மிளிறி, மேலேறி
கடவுளின் அவசியத்தையும் கைவிட்டு வெல்லும்,
மனிதன் மனிதனாக வாழ்வதையே உயர்வென்று சொல்லும்; ஒழுக்கம்!
கொலை கொள்ளை காமவெறிகளுக்கு
சவப்பெட்டி பூட்டி, நன்னடத்தையின் மூலம்
நாகரீகம் வளர்த்து, உண்மையின் ஆழத்தில்
உலகின் சந்தோசங்களை வெல்லுமாயுதம்: ஒழுக்கம்!
பொறாமை அகன்று கோபத்தை ஆளக் கற்று
உடையும் மனங்களை அன்பினால் ஈர்த்துவைக்க
சீர்மிகு குணமிது உதவும், பொய்யின் தடமது ஒழிய – ஞாலத்தின்
பெருமைதனை மனிதனைக்கொண்டு உயர்த்தும்; ஒழுக்கம்!
——————————————————–
வித்யாசாகர்
what sir reten mail pls in tamil
________________________________
LikeLike
புரியலையேம்மா..
LikeLike
மிகவும் சிறப்பான பகிர்வு சார்… வாழ்த்துக்கள்…நன்றி…
LikeLike
நன்றி உங்களின் கனிவான கருத்திற்கு, ஒரு பள்ளிக்கூட ஆசிரியை தன் பள்ளிக்கூடத்தில் சுதந்திர தினத்தன்று படிக்க வேண்டி ஒழுக்கம் பற்றி கவிதை கேட்டார்கள். அவர்களின் வேண்டுதலுக்கிணங்கி எழுதியது. உங்களின் பாராட்டின் நன்றிகள் அவர்களையே சாரும்..
LikeLike