திரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watch?v=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார்.
அதற்கெழுதிய பாடலிது..
பல்லவி
—————————————————–
ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு
புது வெப்பம் முளைக்குமோ
ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு
எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ…
ஒரு காற்று ஒரு வானம்
உன் பார்வையில் கரையுமோ
புது தேடல் ஒன்று பெண்ணுக்குள் பூக்க
கனவுகள் காற்றில் கைவீசுமோ..
சரணம் – 1
—————————————————–
அடிப்பெண்ணே அடிப்பெண்ணே
ஏனோ உயிரில் உரசிப் போனாய்
ஒரு காதல் முத்தம் சிந்தி
புது ஜென்மம் பூசினாய்,
உடலெல்லாம் உனக்காக புது ரத்தம் பாய பருகினாய்
உயிர்காற்றால் மெல்ல எனைத் தீண்டி
என் மரணம் தின்று தீர்த்தாய்;
(ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு)
சரணம் – 2
—————————————————–
தென்றல் வீசும் தெருவொன்றில் இரு
சந்தனம் எரியுதே,
இரு ராகம் மெல்ல ஒன்றாகி
ஒரு பாடலாய் ஆனதே,
சுடுந்தீயே சுடுந்தீயே எனைக் கொன்று கொன்றுப் போட்டாய்,
உன்னிதழின் முத்த சப்தத்தில்
முழு இரவை வென்று உதிர்த்தாய்;
(ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு)
_வித்யாசாகர்
இப்படத்திற்கான நம் பாடலின் தேர்வு பற்றியெல்லாம் பின் அறிந்திடவில்லை. பதில்மடல் இல்லாமையின் பொருட்டு இது தேர்வாகியிருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வாழ்த்துக்கள்..
LikeLike
நண்பர் வித்யாசாகருக்கு,
உங்கள் எழுத்தையும் பாடலையும் ஏதோ போக்கில் பார்க்க நேர்ந்தேன்.
உங்கள் எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதை நன்கு உணர்கிறேன். தொட்ரந்து எழுதுங்கள். உங்களுக்கென தனி இடம் காலியாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட எனக்குச் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள்….
– சந்திரபால்.
LikeLike
ஒரு படைப்பாளியின் வலி புரிந்த உணர்வாளராய் உங்களை மதிக்கிறேன். எழுத்தில் ஊடுறுவ முனைப்பும் படைப்பு சார்ந்த அக்கறையும் அதை எடுத்தியம்பி வாழ்த்த மனசும் கொண்ட உங்களின் பெருங்குணத்திற்கு நன்றியும் வணக்கமும்!!
LikeLike