அன்பும் வணக்கமும் உறவுகளே,
கூடுதலாக அன்றி, உங்களுடனும் தமிழாலும் எழுத்தாலும் இணைந்திருக்க விரும்பி, எனைப்பற்றிய விவரமாக நான் “லண்டன் தமிழ் வானொலி” நேயர்களிடம் பகிர்ந்துக் கொண்டவைகளை எனைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் எனும் எண்ணத்தில் எனது நேர்காணலைக் கேட்கத்தக்க இணைய சுட்டியோடு இவ்விடம் பதிவு செய்கிறேன்.
http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12/#comment-1473
எழுத்துச் சார்ந்த தங்கள் அனைவரின் தொடர் ஒத்துழைப்பிற்கும், மேலுமென் எழுத்து நடை மேன்மைப் பெறவும் மற்றும் கருத்தாழம் மிக்கதாக அமையத் தகுந்தாற்போன்றும் பல ஆக்கப்பூர்வமான நல் கருத்துக்களை வழங்கி ஊக்குவிப்பமைக்கும் எனது மனம் நிறைந்த நன்றியையும் வணக்கத்தையும் உள்ளன்போடு தெரிவிக்கிறேன்.
–
வித்யாசாகர்
நல்ல நேர்காணல். தொடர்ச்சியை கேட்க ஆவலாக உள்ளேன். கவிஞருக்கு பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும்.
LikeLike
நன்றி உமா, இரண்டாம் வாரம்; வரும் வியாழன் அன்று லண்டன் நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஒலிபரப்பு ஆகிறது. நேர்காணல் முடிந்ததும் தொடர் கலந்துரையாடல் கூட இருக்கும் என்று எண்ணுகிறேன்.. இந்திய நேரப்படி 2pm தோராயத்தில் ஒலிபரப்பாகும் போல்..
LikeLike
என்ன சொல்வது.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும், மென்மேலும் இதுபோல் இன்னும் நிறைய கேட்க ஆவலாகவும் உள்ளோம். அதற்கான பிராத்தனையை ஆண்டவனுக்கு சமர்ப்பித்துவிட்டோம்!!
LikeLike
மிக்க நன்றியும் அன்பும் தோழி..
உங்களைப் போன்றோரின் அன்பும் ஆசியுமே எனது வெற்றிகளுக்கான பலமும் முன்நகர்தலுமாக எண்ணி மகிழ்கிறேன். இரண்டாம் பாகத்தையும் கேட்டுவிட்டு கலந்துரையாடலிலும் முடிந்தால் இணைந்திருங்கள்!!
LikeLike
அன்பு வணக்கம் வித்யாசாகர். உங்கள் நேர்காணகல் மூலம் பல விடயங்களை அறிந்து கொண்டேன். எம் கவிஞரின் பெயர் இங்கும் ஒலிக்கின்றதில் மிகமகிழ்ச்சியடைகின்றேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.வணக்கம்.
LikeLike
ஆஹா! அருமை நண்பா,
இப்போதுதான் உங்களுடைய நேர்க்காணல் கேட்டேன், ரொம்ப சந்தோஷமா இருக்கிறது நீங்க பெயருக்கு கொடுத்த விளக்கமும், உங்களுடைய படைப்புகளுக்கு கொடுத்த விளக்கமும் அருமை வாழ்த்துகள் நண்பா …
இப்போதுதான் தெரிகிறது நானும் உங்களுக்கு அருகில் உள்ள ஊர்காரன்தான், முடிந்தால் உங்களை நேரில் காண முயல்கிறேன்.
ஆகாஷ்!
LikeLike