உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!!
பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம்
மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம்
பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும்
பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்;
யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க
வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும்
வெற்றி வெற்றியென அணிவகுக்க
ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த வா பொன்னுலகே..
மழையின் ஈர மனம் முழுதும்
மணக்கும் சந்தன வாசமென – இனிக்கும்
வாழ்வின் ரசம் பரவி – துடிக்கும்
இதயம் இரண்டிற்கும் வாழ்த்துக் கூற வா பொன்னுலகே..
உழைக்கும் வர்கத்து வியர்வைப் போல்
மதிப்பில் உயரும் பண்பு வளர
கட்டும் மனைவியின் கண்களிரண்டில் – அக்கறை
ஒளிரும் ஜோதி கூட்ட ஓடோடி வா பொன்னுலகே..
கூடும் சொந்தம் தோழமையின் – நாடுங்
கண்ணியம் காத்திடவே – வீட்டிலிருந்தே
வாழ்வதனை வெளி யதுகற்கும் பாடத்தை
பாட்டில் ஏற்றும் சந்தம்போல் வாழ்விலேற்ற வா பொன்னுலகே..
பட்டினி வயிற்றை பாசம் நிறைக்கும்
பாட்டிக்குக் கூட பரவசத்தில் பல்முளைக்கும்
விரிக்கும் இறக்கை இரண்டிற்கும் குமர ஆசைததும்பும்
இளமை இரவின் வெளிச்சத்தில் புதிய வானம் தேடும்
பொங்கலிட்ட பானைபோல் வீடு
மங்களம் கட்டும், மனத் தரிசு நிலத்தில்
வாழ்வின் புதிர்கள் குழந்தைகளாய்ப் பிறக்கும்
பொக்கைவாய் சாமிவந்து – சக்கைபோடு போட
புது வாழ்க்கை பொலிவோடு அமையும்,
நீடுநலமோடு வாழ; வளம் பல சேர;
நம் வாழ்த்துக்களும் முழுமையாய் நிறையும், வாழ்த்த வா
பொன்னுலகே..
———————————————————————
வித்யாசாகர்
வணக்கம்
வித்தியாசாகர்(அண்ணா)
நல்ல வைர வரிகளை கோர்வையாக்கி கவிவரியாக வாழ்துமடல் சொன்னீர்கள் உங்களின் பெருமனத்துக்கு மிக்க நன்றியண்ணா
தமிழ்த்தோட்டம் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்கு. என்னுடைய வாழ்த்துக்களும் வாழ்த்தட்டும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் அண்ணா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
வணக்கம்பா. யூஜின் என் மீது பெருமதிப்பு கொண்ட அன்புச் சகோதரர்களில் ஒருவர். என் உடன்பிறவா தம்பிகளில் முக்கியமானவர். நேரில் சென்று வாழ்த்த இயலாது துடித்துக்கொண்டிருக்கும் மனதின் உணர்வுகள் தமிழ்பூசப்பட்டு அவருக்கிங்கே பரிசாக்கப்பட்டுள்ளது. அவரும் அவரின் துணைவியாரும் நலமோடு நீடு வாழ இறையருளும் உங்களைப் போன்ற அன்புள்ளங்களின் வாழ்த்துக்களும் துணையிருக்கும் என்று நம்புகிறேன்.
மகிழ்ச்சியும் வாழ்த்தும் அன்பும்..
LikeLike
மனம் திறந்த அன்பு வாழ்த்துக்கு அன்பு நன்றிகள் அண்ணே
LikeLike
நல்லதுப்பா. புதுக்குடும்பம் எப்போதும் புதுப்பானையைப் போலவே சலிப்பின்றி அன்பின் ஈர்ப்போடு இருப்பதாகவே நாட்கள் அமையட்டும். என் அன்புச் சகோதரிக்கும் எங்கள் அன்பு வாழ்த்தினைச் சொல்லுங்கள். நீடு நலம் வாழ்க..
LikeLike