வெள்ளை வெள்ளையாய் பற்கள் சிரிக்கும்
வானத்து நட்சத்திரமாய் பானையும் மினுக்கும்
மஞ்சள்கொத்து மங்களம் சேர்க்கும் – மண்மணக்கும்
சர்க்கரையாய் வெண்பொங்கல் இனிக்கும்;
பெண்போற்றும் மண்போற்றும் தமிழருக்குத்
திருநாளு; மண்ணாண்ட மன்னவர்கள் மண்ணளந்த
நன்னாளு, வலியோர் சிறியோர்க்கு கொடையளித்த
ஒருநாளு, தை பிறந்தா வழிபிறக்கும் நம்பிக்கையின் முதன் நாளு;
மண்பிசைந்த கைகளுக்கு பானையினால் சோறாச்சி; கற்பூரம்
குங்குமம் விற்கும் பாய்க்கு மதமிரண்டு சமமாச்சி, மாயிலைத்
தோரணமும் குருத்தோலைப் பின்னலும் வாழையிலையும்
புத்தாடை வாங்க ஏழைக்கும் பணமாச்சி; பொங்கலொன்றே
எல்லோர்க்கும் பாகுபாடில்லா பெருநாளாச்சி;
ஊரெங்கும் திரிந்தாலும் பொங்கலுன்னு வீடுவந்தோம்
நாலுநாள் பண்டிகையை நாடெங்கும் கொண்டாடுவோம்
ஆடுமாடு வீடு வயல் அத்தனைக்கும் நன்றி சொல்வோம்
கனுக்கரும்பு இனிப்போட தைநாளில் கூடிநிற்போம்;
தமிழரது மரபாய போகியெனும் பண்டிகை போதும்
பழையன கழியும்நாளில் புதியன புகுமொரு ஜாலம்
தைய்யதில் ஆடை வேய்ந்து பளிச்சென வீடும் பேசும்
பொன்னோர் அன்று கண்ட பொங்கலெங்கள் பொன்னாளே!!
உறவுகள் அனைவருக்கும் மனதிற்கினிய பொங்கல் திருநாட்களின் நல்வாழ்த்துக்களும் அன்பும்!!
வித்யாசாகர்
வணக்கம்
வித்தியாசாகர்(அண்ணா)
பொங்கல் கவிதை மிக அருமையாக உள்ளது
மஞ்சள்கொத்து மங்களம் சேர்க்கும் – மண்மணக்கும்
சர்க்கரையாய் வெண்பொங்கல் இனிக்கும்
அருமையான வரிகள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்,
LikeLike
மிக்க வாழ்த்துக்களும் அன்பும்பா.. உங்களின் அன்பு மனசு பெருக்கெடுத்து வெளியெங்கும் அன்பினால் வியாபித்திருக்கட்டும்…
உங்களுக்கும் குடும்பத்திற்கும் மனதிற்கினிய தைநாளின் நல்வாழ்த்துக்கள்…
LikeLike
மனதை தொட்ட கவிதை.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
LikeLike
மிக்க நன்றியும் அன்பும்.. மனம் நிறைந்த வாழ்த்துக்களும்..
மகிழ்ச்சி எல்லோருக்கும் கிட்டட்டும்…
LikeLike
நாடெங்கும் பொங்கலோ பொங்கலென்று வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்த்துக்கள்!!!!
அருமையான கவிதை!!!
LikeLike
பொங்கலோ பொங்கல்…
மிக்க வாழ்த்துக்களும் அன்பும் செல்லம்..
நம் எல்லோரின் நல்லெண்ணத்தின் அதிர்வு நிச்சயம் நாடெங்கும் நன்மையினை விளைவிக்கும். நம்பிக்கையோடிருப்போம். வாழ்த்துக்களும் வணக்கமும்..
LikeLike