1
ஒவ்வொரு பனிக்காலத்திலும்
கவிதைகளைச் சொரிகிறது
வானம்,
எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக்
கொள்வதைப் போல
ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும்
ஒற்றுமை நிலைக்கையில்
விடியலும் பிறக்கிறது.,
அடுத்தடுத்து வரும் பனிக்காலப்
பூக்களின் இதழ்களில்
சொட்டிவடியும் நீர்முத்துக்களாய்
ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில்
அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன
விடுதலையின் சிலிர்ப்பும்..
மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்..
————————————————————————————
2
புற்களின் நுனியிலிருந்து
விடுபட்டு
மண்ணில் விழுவதற்குள்
மரத்தின் பனிச் சாரல்களில் சில
காய்ந்துவிடுகிறது..
பூமியில்
வெடித்தும் ஏமாற்றமாய்
சில உயிர்களை இழந்துவிட்டு
அனாதைகளாய் நிற்கிறோம் நாமும்’ நம்
இயலாமைகளினாலும்
சில அரசியல் அநீதிகளின்
வெம்மை பொறுக்கமுடியாமல் போய்விழும்வரை;
உணர்ந்து –
கூடிநின்று
ஒற்றைக் குரலை கொடுக்கையில்
தரைவரை வென்று – காயாது
பூமியை வந்துநனைக்கும் மற்ற பனித்துளிகளைப் போல
நம் போராட்டங்களும்
எதற்கும் அஞ்சாது நிற்கையில்
வென்றுதான்கொள்ளும்..
————————————————————————————
3
ஒவ்வொரு
சிட்டுக்குருவியின் கிரீச் கிரீச்
சப்தமும்
ஐயோ என்னைக் காப்பாற்று
காப்பாற்று என்று
கத்துவதாகவே கேட்கிறது,
அன்று எம்மினம்
அழிக்கப் படுகையில்
ஒவ்வொரு குழந்தையும் ஐயோ ஐயோ அம்மா
காப்பாற்று காப்பாற்று
என்றுதான் கத்தியது,
உலகிற்குத் தான்
அந்த கதறல்கள் எல்லாம் வெறும்
கிரீச் கிரீச் என்று மட்டுமே கேட்டதுபோல்..
————————————————————————————
வித்யாசாகர்
வணக்கம்
வித்தியாசாகர்(அண்ணா)
ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும்
ஒற்றுமை நிலைக்கையில்
விடியலும் பிறக்கிறது., இதுபோல ஒருநாட்டில் மாணவர் புரட்சி வெடித்தாள் அந்த நாடே புதியபரினாமம் பெற்றுவிடும் தமிழனாய் பிறந்தாள் நாம்
ஆறாத துன்பங்களையும் மாறாதா வடுக்களையும் சுமக்கிறோம் அருமையான கவிதை மனதை உருகவைக்கும் கவிதை வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
LikeLike
வணக்கம்பா. ஆம் தமிழன் எனும் ஒரு வார்த்தையால் அடைந்த துன்பங்களும் இழந்த உயிர்களின் மதிப்பும் ஈடாகா பெருமானம் கொண்டவைதான் என்றாலும், இனி அதே தமிழன் எனும் சிறப்பால் மட்டுமே அணைத்து நல்லதையும் கூட அடையப் போகிறோம். அதற்கான புரட்சி வெடித்து விட்டது. இனி நம் தலைமுறையானது ஓயாது. நமக்கான விடுதலையை நாமெட்டும் வரையது போராடிக் கொண்டேயிருக்கும்..
LikeLike