உடம்பு சுடும் சூரியனை
விழுங்கி மிதிக்கும் வரப்பெல்லாம்
வியர்வையால நனைச்ச மண்ணு
உழவர் உயிரைப்பறிக்கும் பச்சமண்ணு;
புலரும் காலைப் பொழுதை எமக்கு
ஒப்பாரியா கொடுத்த மண்ணு
படி அரிசி நெல்லு தேடி
தெருவெல்லாம் எமை விதைச்ச மண்ணு;
பாவிமக பொறந்த நேரம்
பச்சவயல் காயுந் தூரம்
வாழ்க்கையது விடியலை சாமி,
ஒரு மரணம் கேட்டும் கிடைக்கலை சாமி;
வீட்டுக் கிணறு வற்றிப் போச்சி
நாட்டுநடப்பு நாசம் ஆச்சி
ஓடிப் பாயும் நதிக்குக் கூட
அணையைக் கட்டும் அற்ப ஆட்சி;
இனி ஏர் புடிச்சி யாரு உழ
ரத்தம் உறிஞ்சும் வயலில் அழ
பாவி சனம் புரியா மண்ணுல
ஜீவன் செத்துதொலையும் கேட்க ஆளில்ல;
வெள்ளைவேட்டி கிழித்து நனைத்து
வயித்துமேல கட்டியாச்சி
எம் புள்ள அழுதே பாலு வேணும்
அந்தப் பாழும்மழையும் தோத்துப் போச்சு;
யாரை நம்பி நாளை எழ
ஊரை நம்பி ஓடி விழ
அரசியல் சாயம் கரைந்த தண்ணில
கொஞ்சம் விஷம் முளைச்சா பிறப்பு தீரும்
இந்த வலிக்கும்உசிரு விட்டேப் போகும்..
————————————————————————
வித்யாசாகர்
ஒப்பாரி தலைப்பு விவசாயமா sir….
LikeLike
மன்னிக்கவும் மணிகண்டன், என்ன கேட்கிறீர்களென்று புரியவில்லை..
LikeLike
sorry sir…
LikeLike