(குவைத், அறிஞர் அண்ணா நினைவரங்கத்தில் பாடிய கவிதை)
என் தமிழுக்கு எதிர்வரும் குரலை
தட்டிக் கலைகிறேன்,
ஒரு தூசென மதிக்கிறேன்,
நெஞ்சு நிமிர மார்தட்டும் மொழிசப்தத்தில்
கர்வம் கொள்கிறேன்,
பிடி வீரம் உண்கிறேன்,
நஞ்சு நீயென ஒதுக்கி –
வெறுக்கும் மனிதரின் உறவறுக்கிறேன்,
எடுத்து தலைவெட்டிப் போடாததொரு கோபத்தை
உள்ளே எரிக்கிறேன்,
உணர்வுக்குள் அடக்கி அடக்கி –
என் மொழியை மட்டுமே முன்வைக்கத் துடிக்கிறேன்,
மூத்தமொழி தமிழுக்கு அஞ்சி – என்
வணக்கத்தோடு இங்கே தலைசாய்க்கிறேன்!!
உறவுகள் அனைவருக்கும் என் மதிப்பான வணக்கம்!!
———————————————————————————————-
நெடுங்காலமாகவே நாம்
அதிகமெங்கும் எதிர்த்துப் பேசுவதில்லை. பேசினாலும் நியாயத்தின் வழியே எல்லோரும் நிற்பதில்லை. நின்றாலும் மொத்தமாக நின்று ஒற்றுமையோடு போராடுவதில்லை. போராடினாலும் வெல்லும் வரைக்கான உறுதியோ நம்பிக்கையோ போதுமானதாக நம்மிடத்தே இல்லை. ஏதோ ஒரு நமக்கான தனித்த வட்டத்திற்குள் கிடைத்தது போதுமென்று நாம் அடங்கிநிற்கும் இடத்தில்தான் கிடைக்காதநம் நீதிக்குள்ளிருந்து சுரண்டப்படுகிறது நமக்கான சுதந்திரமும், விடுதலைநாடி வருந்தும்நம் தாய்மண்ணும், ரத்தக்கரைதனிலே உறையும் ஏமாற்றம் மிக்க அரசியலும். அதை வன்மையாகக் கண்டிக்க எண்ணுகிறது இக் கவிதை;
கவிதையின் தலைப்பு: தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி..
உடம்பு கூசும் மக்கள் கூட்டம்
உதிரம் கொதிக்கா உயிரின் ஏக்கம்
நரம்பு புடைக்க கத்திவிட்டு –
நான்கு மூடியுள் தூங்கும் இளமைப் பட்டாளம்..
எதற்கு இந்த பிழைப்பு வேண்டும்
எதிர்த்துக் கேட்டால் தலையாப் போகும்
அறுக்க உதிரும் இரத்தம் தேடி
மிச்சம் வீரம் இருப்பின் எழுங்கள் போவோம்;
பட்டப்பகலில் அரசியல் வேஷம்
பதுக்கி பதுக்கி ஒழியுது தேசம்
கத்தி ஈட்டி துப்பாக்கி வேண்டாம்
ஒற்றைக் குரலை கொடுத்திடு தோழா;
அச்சமில்லை அச்சமில்லை
சொன்ன உணர்வு மிச்சமில்லை,
துச்சம் என்று ஒதுங்கி ஒதுங்கி
நாம் தொலைக்கும் மண்ணை பறிக்க எழுவோம்;
பண்பு வேண்டும் அன்பு வேண்டும் – பார்வைப் பட்டதும்
பற்றியெரியும் காதல்வேண்டும்,
கொஞ்சு(ங்)குடும்பம் வீட்டையும்போல
நாடும் மிஞ்சநமக்கு – நல்ல அரசியல் வேண்டும்;
பஞ்சுமிட்டாய் பொம்மையா தமிழன் ?
சுற்றி நடப்பதைக் கண்டால் பொறுக்குதில்லை; எங்கும் குற்றம்
எதிலும் ஏமாற்றம், அரசியல் என்றாலே
அப்படியொரு நாற்றம்’
எழுந்துக் கேட்ட நியாயமெங்கே ?
குடித்தத் தமிழச்சி பாலின் வீரமேங்கே ??
பதைக்க பதைக்க உயிர்களைக் கொடுத்தோம்
இனி அடிக்க அடிக்க திருப்பி அடிப்போம்;
வலிக்க வலிக்க பின்னால் போறோம்
பயத்திற்கும் பதவிக்கும் பணத்திற்குமே தன்மானம் விற்கிறோம்’
விழுந்து விழுந்து அழுவதைவிட்டு – இனி
எதிர்த்து நிற்க போர்க்கொடி எடுப்போம்;
துடி துடி’ கொஞ்சம் துடி’ எழு’ கண்களைத் திற
முடியாததொன்றும் மனிதருக்கில்லை; ஒரேயொரு
முடிவை எடு –
அது அரசியல் வெற்றியென்று சொல்லிவிடு;
தடுப்பவன் கை எதுவாயினும்’ தடுப்பவன் கை, ‘அது எதுவாயினும்
அதை தமிழதன் தீரம் கொண்டு முறித்துவிடு,
இனி தனித்து நடக்க பாதை வேண்டும்
மனிதம் நிலைக்க நடக்கும் வீரம் வேண்டும்
அதை மீட்க தமிழினமே பாடுபடு; நம்
பாட்டன்முப்பாட்டனின் விடுதலையை நீ நிமிர்ந்து நடக்கவேனும் பெற்றுவிடு!!
——————————————————————————————-
வித்யாசாகர்
வணக்கம்
கவிதையை படித்த போது என் உணர்வுகள் ஏதோ சொல்லுகிறது…..அண்ணா
கவிதை வடித்த விதம் அருமை.. வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
“தவறாய் எவரடித்தாலும் திருப்பி அடி…” என்ற பதிவில் சிறந்த எண்ணங்கள் வெளிப்படுகிறது.
தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
-யாழ்பாவாணன்-
LikeLike
நட்புறவுகளுக்கு நன்றியும் வணக்கமும் வாழ்த்துக்களும்..
LikeLike