அவர்கள் முப்பதைக் கடந்தவர்கள்
நாற்பதைத் தொட்டவர்கள்
சாபமின்றி வாழ்க்கையை
நாளும் தொலைத்தவர்கள்..
மணக்கும் மல்லிகையின்
வாசம் ரசிப்பவர்கள்,
மணக்கா பெண்ணெண்ணி கனவினுள்
வீழ்ந்தவர்கள்,
கடவுளை கைதொழா
காதலின் பக்தர்கள்
காலில் உதைத்து கடவுளையும்
சலிப்பவர்கள்;
கோவிலே கதியென்று
நாளும் திரிபவர்கள்
காட்சிகளின் மாட்சியில்
குடும்பத்தைப் பார்ப்பவர்கள்;
வாழ வரும் பெண்ணுக்குக்கூட
வரையறை வைத்திருப்பவர்கள்
வாழும் வாழ்க்கையை
விரையமாக்கி வாழும்போதே நொந்தவர்கள்;
காலநேரம் ராசி பார்த்து
சோடைபோன சங்குமலர்கள்
அழகாய்ப்பூத்தும் கசங்கிப்போன
தெருஓர பிஞ்சுமலர்கள்;
தங்கைக்கும் தமக்கைக்கும்
வாழ வழிவிட்டவர்கள்
பின் அவள்பெற்றப் பிள்ளைக்கும்
காவலிருந்தவர்கள்;
வீட்டைக் காப்பதையே
நாட்டிற்கு ஈடாக எண்ணிப் பயந்தவர்கள்
படு தீவிரமாகக் கணக்குபோட்டு
வாழ்க்கையின் பாதியைக் கடந்தவர்கள்;
பாவம் ஆண்களிலும் உண்டிப்படி
முப்பது நாற்பதிலும் முதிர்கன்னர்கள்’
முயன்று கட்டும் தாலியில் உலகத்தீரே
கொஞ்சம் ஆண்களையும் பாருங்கள்; நம்
அண்ணன்தம்பிகளும் வாழட்டும்!!
——————————————–
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
குடும்ப உறவு நிலையை சித்தரிக்கும் கவிதைஅழகான மொழி நடையில் அழகுற எழுதியுள்ளிர்கள் அருமை வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
nice vidhyasagar..
LikeLike
நன்றி உமா.., நீடு வாழ்க.. நலமோடும் வளமோடும் வாழ்க!!
LikeLike