தூரிகை கொண்டு
வரைய வரைய
முழுமைபெறும் ஓவியம்போல்
நம் நாவினிக்கப் பேசி பேசி
தூய்மைகொள்ளும் தமிழுக்கு வணக்கம்!!
——————————————————————
பூச்சொரியப் புன்னகைக்கும்
படைத்தவனுக்கீடாய்,
பாத்தொடுத்து பண்ணிசைக்க
வரலாறாய் வாழும்,
பட்டிதொட்டி கிராமமெல்லாம்
பள்ளிப்படிப்பாய் மீண்டு; எம்
ஏற்ற விலங்கை உடைத்தெறிய விண்ணப்பமிட்டேன்’
——————————————————————
வாள்சுழற்றி வண்டமிழன்
ஆண்ட மண்ணில்
இன்று –
கல்லூரி நிரப்பி;
நமைக் கல்வியால் ஆளும்
ஐயா பாரிவேந்தருக்கும் வணக்கம்!!
——————————————————————
மேலெழும் சூரியனைக் கண்டு
வேறாய் மரமது
நீள்வதைப்போல;
மண்தோன்டித் தோண்டி
எம்மை உள்ளே தேடிக்கொண்டிருந்த வேளை
எம் கவிதைக் கனவுகளுக்கு வண்ணம் கூட்டி
திரைவெளிச்சம் போட்டுத்தந்த
ஐயா செல்லதுரை அவர்களுக்கும் வணக்கம்!
——————————————————————
இங்கு பூத்தப் பூவிற்கு
இங்கே நாங்கள் தீட்டிய ஓவியத்திற்கு
இங்கே நாங்கள் எழுதியப் பாடலுக்கு
அங்கிருந்தே இசைபோட்டு
பாடி
நடித்து
வெற்றியையும் தரவிருக்கும்
“இருக்கு ஆனா இல்லை” குழுவிற்கும்
எங்களின் நன்றி கலந்த வணக்கம்!
——————————————————————
தமிழழகில் பேசி பேசி
வார்த்தைச்சரம் கோர்த்துவரும்
தொகுப்பாளினி சகோதரி தேவி ரவிக்கும்,
எம் வரிகளுக்குக் கைதட்டி
வெற்றிநடை போடவைக்கும்
அரங்கத்து உறவுகள் உங்கள் அனைவருக்குமெனது
பணிவான வணக்கத்தைக் கூறி..
என் கவிதைக்கு வருகிறேன்..
என் கவிதைக்கான தலைப்பு: நாக்குச்சுவையில் நசுங்கும் மனிதம்..
வித்யாசாகர்