ஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை..

சை நிரந்தரமானவை
அழிவதில்லை;

வாழ்வின் மேடு பள்ளங்களில்
ஏறியிறங்கியும்
அதற்கான இடத்தை
அதுவாகவே தேடிக்கொண்டுமிருக்கிறது ஆசை;

சிகரெட் சுடும் உதட்டிலும்
மது குடிக்கும் போதையிலும்
மலிவாக மணக்கும் வியர்வையிலும்
அற்பமாக நிலைக்கிறது ஆசை;

கடன்வட்டி கனத்தில்
ஏதோ நடந்திராத ஏக்கத்தின் வலியில்
திறந்தக் கதவின் திருட்டில்
மூடியக் கதவின் இருட்டுள்
முள்போல குத்துகிறது ஆசை;

பெண்ணின் பார்வை
உடல்எரிக்கும் காமம்
உயிர்தொடும் காதலென
எல்லையற்றப் பரப்பில்
முடிவின்றி விரிகிறது ஆசை;

கட்டில் செய்து
கட்டிலில் படுத்து
கட்டிலில் இறந்தபின்னும்கூட
மனிதனுக்கு பூபோட்டு
மேளமடித்து
எரிக்கவும் சந்தனம் கேட்கிறது ஆசை;

மரணத்தில் செரிக்காமல்
பிணத்தோடு எரியாமல்
ஒன்றை மேலாக்கி
மற்றொன்றைக் கீழாக்கி
முன்னிற்றலில் மேலோங்கி
மேலோங்கி
மேலோங்கி
கீழேயேக் கிடக்கிறது ஆசை;

இறக்கம் கேட்டு
மனிதம் தேடி
பஞ்சமொழிய மனதுள்
கெஞ்சி,
மனதை லஞ்சத்தால் குடித்து
இனாமிற்கு தன்மானத்தை விற்று
ஓட்டுச்சாவடியுள் வீணாய்
பதவிகேட்டு அலையுது ஆசை;

பிணமடித்துத் தின்கையில்
நாக்கில்சொட்டும் ரத்தத்தைப் போல
ஆங்காங்கே
நர பல் கடித்து
நீ நானென
நாம் போட்டுக்கொள்ளும்
சுயநலச் சண்டைகளுக்குள்
ஆசையும் சொட்டிக்கொண்டேயிருக்கிறது;

ஆசையை
அறுத்துக் கொள்வதேயில்லை நாம்
அதற்குள் நின்றுவிடுகிறது மூச்சு!!
———————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றாடி விட்ட காலம்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை..

  1. உண்மை தான்… பேராசை என்றால் இப்படித் தான்…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நம் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்குமாய் நடக்கும் யுத்தத்தில் களமாட இயற்கை கொடுத்த ஆயுதம்; ஆசை. வீழ்ச்சிக்கு மட்டுமே அதிகமானோர் பயன்படுத்துகிறோம். நன்றியும் வணக்கமும்..

      Like

  2. yarlpavanan சொல்கிறார்:

    ஆசைகள் பல விதம்
    ஒவ்வொன்றும்
    எல்லை மீறினால்
    தரும் நரகமே!

    Like

  3. yarlpavanan சொல்கிறார்:

    ஆசைகள் பல விதம்
    ஒவ்வொன்றும்
    எல்லை மீறினால்
    தரும் நரகமே!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s