வீடு வாசல்
விடுதலை எல்லாம் வேறு,
ரத்தவாடை மறக்கும் மனதுள்
சற்று தேசக்காற்று நிறையட்டுமே;
குண்டுபட்ட மார்புகளில்
வழிந்த ரத்தத்தின் ஒரு துளி
உன்னோடோ என்னோடோ நிற்குமெனில்
நம் மதிப்பை எண்ணிச் சிரிக்கட்டுமே;
ஏற்றும் கொடியின்
வண்ணத்தில்
எம் விடுதலையின் ஏக்கம் தெரியவொரு
சாத்தியநெருப்பு மூளட்டுமே;
சலசலக்கும் உணர்வுக்குள்
நரம்பு வெடிக்கும் ரணம் புகாத
பேத முட்டைகள் சாதியோடும்
மதத்தொடும் சாக்கடையுள் வீழட்டுமே;
மண்ணில் புதைந்த விதையேற்று
சந்ததி சேரும் கைகளுக்குள்
எல்லோருக்குமான விடுதலையே
நாளை ஏற்றயிறக்கமின்றி கிடைக்கட்டுமே;
நம் இனிவரும் நாளை சமைக்கையிலே
அங்கே எதிர்வரும் யாவர் விடுதலைக்கும்
எதிர்ப்பில்லா மனத்தை எவ்வுலகும்
எவர்க்குறித்தும் என்றெண்ணி ஏற்கட்டுமே;
பறக்கும் கொடி பரபரக்க
இனிக்கும் மிட்டாய் நெஞ்சினிக்க
சிரிக்கும் மனது மனிதத்தால் பூச்சொறிக்க
சமாதானம் சமாதனாமெங்கும்
சத்தியத்தோடு நிலவட்டுமே..
வாழ்வோருக்கு வாழ்த்தும்
விதைந்தோருக்கு வீரவணக்கமும்..
——————————————————————
வித்யாசாகர்
சாதியோடும் மதத்தொடும் சாக்கடையுள் வீழட்டும்
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்…
LikeLike
நன்றியும் வணக்கமும்..
உங்களுக்கும் வாழ்த்துக்களும் அன்பும் தோழர்..
LikeLike
தங்கள் புதிய கருத்துகளை வரவேற்கிறேன்.
LikeLike