1
டாஸ்மாக்
புகையிலை
பான் குட்கா
வெண்சுருட்டு
நீதியற்ற கொலை
நிற்காத கொள்ளை
தீராத லஞ்சமென
இத்தனைக்கு மத்தியில் ஏற்றப்படும் கொடி
வீழ்ச்சியின் சாட்சி!!
——————————————————————
2
ஜாதிவெறி
மதச் சண்டை
நாத்திகம் ஆத்திகம்
மேலோர் கீழோர்
சுயநல அரசியல்
இணக்கமின்மை
…..
இல்லை இல்லை ..
இன்னுமிங்கே நான் மிருகங்களுக்கு
அடிமை தான்..
——————————————————————
3
எச்சில் துடைக்கும்
பொறுக்கும் கைகளில்
கொடி குத்தி விடாதீர்கள்
ஊசி மட்டுமே
குத்திக் கொண்டுள்ளது
நெடுங்காலமாய்..
——————————————————————
4
பசியாறட்டும்
பசியாறட்டும்
பணம் படைத்தோரே
இன்றைக்கு மட்டும் மிட்டாய் தந்துவிட்டு
நாளைக்கு பட்டினி எதற்கு?
அவர்களை விட்டு விடுங்கள்
அவர்கள் பசியாறட்டும்!!
——————————————————————
5
நான் மட்டும் சிரித்தால்
பைத்தியம் எனில்
எனக்கு மட்டும் கிடைக்கும்
வரமும் சாபம்தான்..,
இது குதர்க்கமில்லை..
சிந்தியுங்கள்
இன்றேனும்
எல்லோருக்குமாய் சிந்தியுங்கள்
நாளை பறக்கயிருக்கும் நமது தேசக்கொடி
எல்லோரின் மகிழ்ச்சியிலும் பளிச்சிடட்டும்..
——————————————————————
வித்யாசாகர்
சாட்டையடி வரிகள் ஐயா…
LikeLike
வீழ்ச்சியின் சாட்சியாக விளக்கிய வண்ணம் அருமை
LikeLike