இலக்கின்றி ஒரு பயணம்
இமையம் தொடும் ஏக்கம்
எதற்கோ விசும்பும் வாழ்க்கை
எல்லாமிருந்தும் வெறுமை
கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும்
மயானமொன்றில் –
தனியே பறக்கும் பறவை;
கூடுகட்டும் ஆசை
குடும்பம் விரும்பும் மனசு
பாடித் திரியும் பாதையில்
பட்டதும் சுருங்கும் கைகள்
காதடைத்துத் தூங்கி –
கனவில் உடையும் நாட்கள்
காத்திருப்பில் வலித்து வலித்து
காலத்தால் நோகும் பிறப்பு;
சுட்டு சுட்டு வேகும் மனிதம்
பிற உயிர்கள் சுடாதிருக்க
வேண்டும் ஆசை
எழுதத் துடிக்கும் விரலில்
எரியூட்டும் மிருகக் கற்றை
சலிக்கவொண்ணா அத்தனையையும்
ஏற்றுக்கொண்டே ஓடி ஓடி
திரும்பிப் பார்த்துப் பார்த்து அழும்
சிறுபிள்ளை தோற்றம்;
படிக்கும் பருவமில்லை
இது வாழும் தருணம் என்றால்
கிடைக்கக் கிடைக்க அடையும் அறிவில்
கிடைத்திடாத இடம் கேட்டு
துடித்து துடித்து நகரும் நகர்வை
வரமென்றோ
சாபமென்றோ
தானே வாஞ்சை பூசிக்கொள்ளும்
வாழ்க்கை;
முடியும் தருணம் அருகில்
நீட்டிக் கொள்ளமுடியா மரணம்
இயற்கை ஊட்டும் அன்னம்
யாரும் மறுக்கமுடியா நியதி
எதற்கும் எதிர்ப்பு இல்லை
எதுவும் முடியா கதியில்
எல்லாம் போதல் போதல்
யதார்த்தம் –
இருப்பில் உள்ளது மட்டுமே;
அதை
வாழ்ந்து வாழ்ந்து தீர்ப்போம்
தீராதவை தொடரும்..
—————————————————-
வித்யாசாகர்
காலங்கள் மாறும்…
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்…
வாலிபம் என்பது பொய் வேஷம்…
தூக்கத்தில் பாதி…
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி…
போனது போக எது மீதம்…?
பேதை மனிதனே…!
பேதை மனிதனே கடமையை இன்றே…
செய்வதில் தானே ஆனந்தம்…!
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்…
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்…
நீங்கள் கேட்டவை – இது படத்தின் பெயர்…
வாழ்த்துக்கள் ஐயா…
LikeLike