எங்கே எங்கே ஓடுற
யாரைப் பார்த்து ஓடுற
பேயைக் கண்டு நடுங்குற; நீ
சின்னப்பொய்யில் அடங்குற,
சுட்டிபையன் காதுல
சுத்தினது பேயிதான்
பெரியவனா ஆனதும்
பயத்தைமூட்டும் பேயிதான்.,
கண்ணைமூடி காட்டுல
கயிறுகட்டில் வீட்டுல
அடுப்புமூளை முடங்கின
பூனை கூட பேயிதான்.,
கட்டுக்கதைய விட்டுடு
கண்ணைத் திறந்து பார்த்திடு
இருட்டில் விளக்கை ஏற்றிடு
வெளிச்சத்தையே நம்பிடு..
வெள்ளிக்கொம்பு பல்லில்ல
வெளிய நீட்டும் நாக்கில்ல
அத்தனையும் பொய்யுடா; இது
அந்தக் காலமில்லைடா..
யாரு சொன்னா என்னடா
நீ எதிர்த்துநின்னு யோசிடா
அப்புறமா பாரடா – அட
அசைந்தது உன் நிழலுடா..
———————————
வித்யாசாகர்
கருத்துள்ள அழகான பாடல் ஐயா…
LikeLike
அருமை!
LikeLike