குச்சிமிட்டாய் வாங்கலாம்
கொடிகுத்திப் போகலாம்
வீரம் விளைந்த மண்ணுல
விடுதலையைப் பாடலாம்…
(குச்சிமிட்டாய் வாங்கலாம்..)
சோகத்தை மாற்றலாம்
சொகுசு நிலமாக்கலாம்
கண்திறக்கும் அறிவியலால்
விண்கடந்தும் போகலாம்,
சத்தியத்தைப் பாடலாம்
சங்கெடுத்து ஊதலாம்
நித்தமும் மகிழ்ச்சியில்
மற்றவரையும் போற்றலாம்,
(குச்சிமிட்டாய் வாங்கலாம்..)
ஆண்டப் பரம்பரையை
படிக்கலாம், அவன் பட்ட வலியை
நினைக்கலாம், எட்டுத் திக்குமெமது வீரத்தை
பின் கண்ணியத்தோடு காட்டலாம்,
பட்டிதொட்டி மாற்றலாம்
படிக்கப் படிக்க பண்பைக் கூட்டலாம்
மூடதனத்துக் குப்பைகளை
மூட்டைகட்டிப் போடலாம்,
(குச்சிமிட்டாய் வாங்கலாம்..)
குடிசைகளை அகற்றலாம்
குறைந்தது பொத்தல்களையேனும் மூடலாம்
மூடியவீட்டில் அன்புநிறைத்து
முதியோரில்லாம் ஒழிக்கலாம்,
சட்டை பத்து வாங்கலாம்
அதில் இல்லார்க்கிரெண்டென நீக்கலாம்
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க
ஆனந்தக் கூத்தாடலாம்,
அக்கம்பக்கத்துப் பசி அறியலாம்
அவரை ஒரு பருக்கைச் சோற்றாலே
அணைக்கலாம், கூடியுண்ணும்
ஒற்றுமைருசியில் நாட்டை நித்தமும் நித்தமும் காக்கலாம்..
(குச்சிமிட்டாய் வாங்கலாம்..)
————————————————————-
வித்யாசாகர்
அழகான வரிகள். நன்று!
LikeLike
அருமை ஐயா… வாழ்த்துக்கள்…
LikeLike
nanraaga irukkirathu…. paadippaadi engenge thattukiratho angellaam veru
sorkalai maatrip pottaal pillaikalukku elithaaka irukkum…!
arumai..arumai..!
LikeLike