ஓடுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..
ஓடுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..
அத்தனையும் கனக்குது
வாழ்க்கையா இனிக்குது,
அத்தனையும் கனக்குது – நாளைய
வாழ்க்கையா இனிக்குது..,
தூக்கத்தை தொலைக்குறேன்
கல்லுமுள்ளு கடக்குறேன்,
உண்ட வயிற் மீதிய
பாடத்தால நிறைக்கிறேன்..
(அத்தனையும் கனக்குது..)
கூட்டத்துல கலையுறேன்
கனவுகளை மறக்குறேன்
அம்மாத் தந்த முத்தத்தையும்
அப்போ அப்போ நினைக்கிறேன்
(அத்தனையும் கனக்குது..)
ஓடுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..
அப்பாக் கண்ணு கலங்கினா
அம்மா கண்ணும் கலங்குமுன்னு
தேர்ச்சிப் பெறத் துடிக்கிறேன்
என் ஆசைகளை இழக்கிறேன்..
சட்டைப்பையும் கிழியுது
புத்தகமோ கூடுது
ஆசிரியர் அடிக்கையிலப்
பெத்த வயிறு வலிக்குது..
எல்லாத்தையும் தாங்குறேன் – என்
சிலுவையை நான் சுமக்கிறேன்
எல்லாத்தையும் தாங்குறேன் நான்
சிலுவையை தினம் சுமக்கிறேன்..
ஓடுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..
புதுப் பள்ளிக் கூடம் – புதுப்
பசங்கக்கூட பூதம்
ஆசிரியரைக் கண்டாப் போதும்
இதயம் நில்லாமலே ஓடும்
பள்ளிக்கூடம் தப்பில்ல ஆனா
தூக்கத் தோளு தாங்கலை…
கண்திறந்தச் சாமிதான்
ஆனா கையுங் காலு ஓயலே..
ஓடுஒடுன்னு ஒடுறேன்
மூட்டைசுமந்து நடக்கிறேன்..
ஓடியாட நேரமில்லை
உடன் பசங்களையும் காணலை,
காலத்தைக் கணினியிலக்
கற்பனையோடு தொலைக்குது
நொண்டிக்காலு குதிரையாட்டம்
எல்லாங் கூட மறக்குது
எழுதிவெச்ச கணக்குல
வாழ்க்கை யோட்டம் ஓடுது..
அத்தனையும் கனக்குது
வாழ்க்கையா இனிக்குது,
அத்தனையும் கனக்குது – நாளைய
வாழ்க்கையா இனிக்குது..,
————————————-
வித்யாசாகர்
மனம் கனக்குது ஐயா…
LikeLike