எங்கும் பரவட்டும் இதுபோன்றப் பாடல்கள். படிப்பினால் தெளிவுற்றதொரு சமுதாயம் பிறக்கட்டும். பிள்ளைகளை படிக்கவையுங்கள். படிப்போரால் சுற்றத்தாரும் நற்பண்புதனை கற்கலாம். நற்பண்பினால் அரசியலில் நல்ல மாற்றங்கள் நிகழலாம். அரசியலால் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு எல்லோரும் சமநிலையில் பாதுகாக்கப் படலாம்.. போதனை நேர்த்தியெனில் சாதனை சமபங்காகிவிடும்.. சாதிக்க இருப்போர்களுக்கு வாழ்த்தும் அன்பும்..
தனது ஏழ்மையிலும் மனம் தளராது குழந்தைகளைப் படிக்க அனுப்பும் பெற்றோர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்..
கேட்போர், உணர்வோர், ரசிப்போர், பகிர்வோர், பாராட்டுவோர், கருத்துப் பகிர்வோர், குறைகாண்போர் அனைவருக்கும் நன்றி நிறைந்த வணக்கத்துடன்..
———————————————————–
வித்யாசாகர்