விற்கிறாள்;
அரைக்கீரை முளைக்கீரை
என்றெல்லாம் குரலெழுப்பிப்
போகிறாள்,
மாம்பழம்
முருக்கு சுட்டுக்கூட
விற்பாளவள்;
அவளின் கூன்விழுந்த
முதுகின் மீதேறி
தலைநரைத்த மயிர்களோடு ஆடி
முதுமை வலிப்பதையும் அறியாது
தனிமை சுடுவதும் புரியாமல்
வெயில் மழையில் தேயுமவளின்
கால்களையும் கவனிக்காது,
அவளைக் கடந்துபோய்
பிறரிடம் கைநீட்டி
பிச்சை வாங்கி
வயிற்றை சோம்பலால் நிரப்பி
வயதை சுயநலத்தால் தீர்க்கும்
குமரிகளையும்
குழந்தைகளையும்
உழைக்க முடிந்தவர்களையும் காண்கையில் –
செருப்பெடுத்து என் தலையில்
ஆயிரம் அடி அடிக்கிறது என் மனசு..
வளரும் சமூகம் சாய்ந்துகொண்டே
வளர்வதற்கு
நானும் காரணம் என்கிறது,
மறுக்கவே துணியாமல்
மேலேவிழும் செருப்படிகளோடு
மிக வேகமாக நடக்கிறேன்; அந்தப்
பாட்டியிடமிருந்து
ஒரு மாம்பழத்தையோ
ஒரு கட்டு கீரையையோ
ஒருபா குறைத்து கேட்டு வாங்கிக்கலாம்..
தெருவில் நாளை நம்
பிள்ளைகள் பிச்சை எடுத்தால்
போட உதவும்..
——————————————————