10
பொதுக் கழிவறைகளுக்கு
வாயிருந்தால்
காரி உமிழ்ந்துவிடும்
மனிதர்களின் முகத்தில்..
வாயிருந்தால்
காரி உமிழ்ந்துவிடும்
மனிதர்களின் முகத்தில்..
நிறைய ஜென்மங்களுக்குப்
புரிவதேயில்லை –
தான் உபயோகித்த இடத்தை
தானும் சுத்தமாக வைத்துக்கொள்ள
வேண்டுமென்று;
போகட்டும்..
போகட்டும்..
குறைந்தபட்சம்
ஒரு வாலி நீரேனுமள்ளி
ஊற்றிவிட்டுப் போவார்களெனில் (?)
அதுவரை –
கழிவறைகளுக்கு
வாயில்லாமலே போகட்டும்!!
——————————————————
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா.
உண்மைதான்… எல்லோரும் என்று சொல்ல முடியாது சிலர் இருக்கத்தான் செய்வார்கள்… அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLiked by 1 person
மிக்க நன்றிப்பா..
LikeLike