15
கொசு பாவம்
பசிக்குத்தான் ரத்தம் குடிக்கிறது;
பசிக்குத்தான் ரத்தம் குடிக்கிறது;
நாம்தான் கொலைக்காரர்கள்
வலிக்கு பதிலாக –
கொசுவையே கொன்றுவிடுகிறோம்.
கொசு
அதன் இயல்பில்
அது சரி;
எனில் –
நாம்?
——————————————————
வித்யாசாகர்
முகநூல் நண்பர் துரை: கொசு கடித்தால் ஓகே ஆனால் டொங்கு மலேரியாவையும் தந்துவிட்டல்லவா செல்கின்றது அதுவும் இயற்பியல் அல்லவா?அதற்கு என்ன செய்வது?
வித்யாசாகர்: சரிதான்; கொசுவை விரட்டுவதற்கோ கையிலிருந்து தட்டி அல்லது உதறி விடுவதற்கோ அல்லது அது வாழுமிடம் ஒதுங்கி இருக்கவோ தடையில்லை. இங்கு சொல்லப்படுவது ஒரு மனதின் அடி ஈரம் பற்றி. மரங்களை வெட்டி காடழித்து மிருகங்கள் வாழும் இடத்திற்கு சென்று பின் அங்கு வரும் அவைகளை விரட்டும் பண்பை நீதி என்று நாமெண்ணி வாழ்வது முறையில்லை என்பதை சற்று சிந்திக்கக் கேட்கும் நோக்கம் மட்டுமே இக்கவிதைக்கானது..
கொசு கொடித்தால் நோய் வரும் தான், மனிதம் தேங்கிய மனநிலையில் வாழ்வதெனில், வராத சுற்றம் அமைய நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். வந்து அதை அடிப்பானேன். ரத்தம் குடிப்பது அது இயல்பு அது நமைப் போன்ற மிருகங்களை தேடித் தான் வரும், அதை கொல்வது நம் இயல்பா? இல்லையே நாம் பகுத்தறியக் கூடியவர்கள். நமது சுற்றத்தை தூய்மை படுத்தி காத்து வைத்துக்கொள்ள நம்மால் முடியுமே.
இன்னும் சற்று ஆழமாக சொல்வதெனில். கொசு வந்தால் கடித்துவிடுமே என்று அவைகளை விரட்டவோ, நாம் ஒதுங்கவோ செய்வதை விட, வந்தால் அவைகளை அடிக்க நேரிடுமே என்று அவைகளைவிட்டு ஒதுங்க முயல்வது போன்றதொரு ஈர மனநிலையை மனிதம் தேங்க நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை எதிர்ப்பார்த்தே இந்த சிந்தனை இங்கே கவிதை எனும் களம் கேட்டு பதியப்பட்டுள்ளது..
LikeLike