நீருள் புகும்
ஒளியைப் போல
மனதுள் புகும் எண்ணங்களே.. எண்ணங்களே..
உலர்ந்த
நீரின்மையிலும்
இருந்துவிடும் வண்ணங்களாய் – மனதுள்
ஆழத்தங்கி விடும் –
எண்ணற்ற எண்ணங்களே.. எண்ணங்களே..
மேலழுக்கைத் துடைப்பதற்குள்
உள்கோடி வேர்விட்டு
வாழுங்காலத்து பசுமையை யுதிர்க்கும்
இயல்பொழியா எண்ணங்களே.. எண்ணங்களே..
இருக்கும் வாழ்க்கையது
ஒன்றே ஒன்று – அதில்
ஆசை கோபம் வெறுப்பைச் சேர்த்து
பாதியை மாய்க்கும் எண்ணங்களே.. எண்ணங்களே..
சுட்டப்புண்ணின் தடம்போல
விட்ட உடலின் மிச்சத்தையும்
இரத்தம் ஊறும் முன்னேமுந்தி
சீவனோடு சேரும் எண்ணங்களே.. எண்ணங்களே..
நான் சிவமாய் ஆகும்
காலமெப்போ..?
மனம் அமைதியில்
ஆழ்ந்திருக்கும் காலமெப்போ..?
உள்ளேநின்று உன்னைப்பார்த்து
என்னையறியும் தருணமெப்போ..?
எண்ணங்களே.. எண்ணங்களே..
மெல்ல இனி
மறைந்துப்போங்கள்..
உங்களையும் கடந்து நான்
போக –
எண்ணிமுடியா தூரமுண்டு..
இருக்கும் வாழ்க்கை
இவ் வொன்றைத்தான்
வாழ ஆசை கோடியுண்டு..
எண்ணநெருப்பில் மூளும்
முடியமுடியா போதை
மரணம்வரை மாளாதுண்டு..
பிறவி அறிந்து
பெற்றதில் வாழ போதிய ஞானம்
பெறயியலா பல எண்ணங்களே.. எண்ணங்களே..
நடந்துப்போக நடந்துப்போக
கிடைத்ததுபோல் தூரம் நீளும்.,
நீளுவது நீளட்டும் –
இப்போதெனக்கு விடைகொடுங்கள்
மெல்ல உள்புகுந்து
முழுதுமாய் உற்றுநோக்கி
முழுதீரத்தை மீதிறக்கி
எப்பொழுதிற்குமா யுங்களை விட்டுவிடுகிறேன்
மெல்ல சென்றுவிடுங்கள் மெல்ல விட்டுவிடுகிறேன்..
———————————————————————
வித்யாசாகர்
nice…
LikeLiked by 1 person
நன்றி உமா..
LikeLike
கவிதையைப் பொறுமையாக படிக்க நேரமில்லை…மன்னிக்கவும்..! விழா வேலைகள்
குறுக்கே….வித்யா இன்னும் வராததால் அந்த வேலைகளும் இருக்கே..வீட்டுக்கார
அம்மா வரவு வேற குறுக்கே மருக்கே……என்ன செய்யட்டும்…!
தங்களின் குறிப்பு மிகவும் தங்கள் எழுத்தில் அவசியம்..!
மலர் வேலைகள் ஒரு வழியாக தம்பி முடித்திருக்கிறார்…ஆனால் கொம்பு
முளைத்ததுபோல் முறைக்கிறார்…!
தங்களின் திட்டம் என்ன…என்ன முடிவில் இருக்கிறீர்கள்…? நான் ஏதும் செய்ய
வேண்டுமா..?
LikeLike
அயராது உழைக்கிறீர்கள். உழைப்பு நன்மையைப் பயக்கட்டும் ஐயா. இன்று மனற்பூக்களிற்கான சுயக்குறிப்பினை அனுப்பிவைக்கிறேன். வருத்தம் வேண்டாம் எல்லாம் அதனதன் போக்கில் சரியாக அமையும், மாறிக்கொள்ளும். நன்மை நினைக்கையில் நன்மையே நடக்கும் ஐயா. வாழ்த்துக்களும் அன்பும்..
LikeLike