அளவிற்கு அதிக தேனீர்
பசியின்றி –
ருசிக்கென்று வாங்கி
உண்ணாமலே மிச்சம் விட்டுப்போகும்
உணவுப் பொருட்கள்,
பழக்கத்தின் பேரில் அடிமையாகி
பணம்கொடுத்து உடம்பைப் புண்ணாக்கும்
புகையிலை
வெண்சுருட்டு
குடி
கஞ்சா
பீடி
பான்பராக்
போதைப் பொருட்கள்,
அதற்கென பின்னாளில் செய்யும்
மருத்துவச் செலவுகள்,
அதோடு மட்டுமின்றி –
யாருமில்லா அறையில் எரியும் மின்விளக்குகள்
வெறுமனே அழைத்து மணிக்கணக்கில் பேசும்
தொலைபேசி அழைப்புகள்,
மாடிக்கு குளிரூட்டி குளிரூட்டி
கூரைகளை எரிக்கும் சென்ட்ரலைஸ் ஏசிகள்,
பத்திருபதிற்கும் மேலாய் அடுக்கியுள்ள சட்டை
புடவை
குழந்தைத் துணிகள்,
ஆடம்பரத்தை கூட்டி கூட்டி
நமை ஆசையின் மோகத்தில் அலையவிடும்
ஆடம்பர
அலங்காரப் பொருட்கள் என –
இவைகளையெல்லாம் நாம்
அலசிப்பார்த்து
எது வேண்டும் வேண்டாமென்று
சரிசெய்து
குறைத்து
நீக்கி
இல்லாதோருக்குக் கொடுத்து
அவசியமற்று –
உழைப்பை விரையம் செய்யாமலும்,
பிறரிடமிருந்து
சுரண்டாமலும் இருக்கமுடியுமெனில்;
வறுமைப் பசியையும் நம்மால்
விரைவில் –
ஒழிக்கமுடியும்!
எங்கோ வீட்டில் முடங்கும்
பிள்ளைகளுக்குப் படிப்பையும்,
மழை ஒழுகும் கூரைக்கு
ஓலையையும்,
பச்சை உடம்பை மூட ஆடையும்,
கனவுகளைச் சுமந்துவாழும் பெண்களுக்கு
வாழ்வையும் தரமுடியும்!
மாற்றம் என்பது
சொல்வோரிடத்தில்
கேட்போரிடத்தில் இல்லை
மாறுவோரிடத்திலிருந்தே மற்றவர்க்கும் கிடைக்கிறது!!
————————————————————
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது இரசித்து படித்தேன்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
நன்றப்பா..
LikeLike