வானத்திலிருந்து வெள்ளி விழுந்து
வீட்டிற்குள் வெளிச்சமேறும் மகிழ்ச்சி..
காத்திருந்தக் குயிலுக்கு – பாட
ஜோடிக்குயில் வந்தாதான மகிழ்ச்சி..
பாட்டிலிருந்து இசை பிரிந்து இன்னும்
பல பாட்டுக்களாய் மாறும் மகிழ்ச்சி..
வாழுங்காலம் வழியெங்கும் – இனி
இன்பமே இன்பமே உனைச்சேர மகிழ்ச்சி
பறையில் ஒலிக்கும் அதிர்வாக உன்னின்
திறமை எங்கும் படர மகிழ்ச்சி..
ஒலியோடு ஒளியாக – உன்னவள் சிரிப்பில்
நீ பூப்பூவாய்ப் பூத்திருக்க மகிழ்ச்சி..
சிறகடிக்கும் காக்கைக்கும் புதுப்
பாட்டு வந்தளவு மகிழ்ச்சி..
புத்தம்புதிய ஆடையைப்போல நீ – புது
ஆயுளையும் உடுத்திக்கொள்வது மகிழ்ச்சி..
கனவு சுமந்து கனவு சுமந்து நீயவள்
கண் குடிபோனது மகிழ்ச்சி..
இனி கண்ணொன்று கண்ணிரண்டென நீ – பல்கி
பெருகி பெருகி நன்னிலமெங்கும் நிலைத்திருக்க மகிழ்ச்சி..
குறள் போல அளவாய்
குறள் போல ஆழமாய்
குறள் போல எழிலாய்
குறள் போல அழியாமல் உன்புகழ் நிலைத்திருக்க மகிழ்ச்சி..
வனமெங்கும் மலர்களின் சிரிப்பு
நிலமெங்கும் நிம்மதியின் வாசம்
கடலெங்கும் உனை வாழ்த்தி ஓசை
புவியெங்கும் உன் திருமணம் நடக்கும் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
எங்கும் மகிழ்ச்சியே நிறைந்திருக்க
மணமகன் முனு. கோட்டீஸ்வரன்
மணமகள் கு. யுவராணி நீவீர் இருவரும்
வளமோடும் நலமோடும்
செல்வங்கள் பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்..
பேரன்புடன்..
கடல்கடந்த அன்போடு.. முழு நினைவோடு..
வித்யாசாகர்
(வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், குவைத்)
மகிழும் மனதில் மகிழ்ச்சி மலர மகிழ்ச்சி
நெகிழும் நெஞ்சில் நிகழ்ச்சியறிய நெகிழ்ச்சி
பகிரும் பாங்கில் பகிர்வினை கூறும் திறமை
அகிலம் அதிலே அகமதில் பெருமை
ஆக்கும் உம் கவி அருமை.
கவிதை அருமையாக இருக்கிறது, நாங்களும் இணையலாமா.
நன்றி.
LikeLike