தமிழனாய் பிறந்ததற்கே பெருமைக் கொள்ளச்செய்த ஐயா திரு. அப்துல்கலாம் அவர்களின் பொற்பாதம் வணங்கி, மனக் கண்ணீர் கடலோடும் உலகத் தமிழர்களின் துயரத்திலும் பங்குகொண்டு, இந்த என் நினைவஞ்சலியை இங்கே பகிர்கிறேன்..
‘கனவு காண்
அது உன் உறக்கத்தில் நீ காணும் கனவல்ல, உனை
உறங்கவிடாததொரு கனவைக் காண்” என்றுச் சொன்ன
இந்த உலகமே இன்றுப் போற்றும் மாமேதை
அறிவுச்சுடர்
ஐயா திரு. அப்துல்கலாம்
அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது
அப்துல்கலாம் ஆவதற்கு அல்ல
வித்யசாகராக மட்டுமே வாழ்வதற்கு..
ஒருநாள் அரசு விடும் விடுமுறையில் மகிழ்ந்து
மறுநாள் மறப்பதற்கல்ல
இரண்டுநாள் உழைத்து,
அதன் ஊதியமென் உள்ளங்கையில் வந்துநிற்கையில்
அவரை மகிழ்வோடு நினைப்பதற்கு..
வெறும் படித்ததை நினைத்து
புகழ்வடைய அல்ல
படித்தவனாய் உயர்ந்து நடப்பதற்கு,
உள்ளத்தால் சிறந்து வாழ்வதற்கு..
பண்பையும் அன்பையும்
போதிப்பவனாயல்ல; பண்பிலும் அன்பிலும்
உயந்தவனாய் நிலைத்திருப்பதற்கு..
பிறர் இகழ்ந்தாலும் நொடிவதைக் கடந்து
பொறுமையை மட்டும் பறைசாற்றிட அல்ல
பொருத்து பொருத்து நிலைக்குமென் பெயரில்
அவரின் பெயரை முன்வைத்து யிறப்பதை பெரிதாய் உணர்கிறேன்..
ஐயா அவர்களின் இத்தகைய வானளாவிய
இப்புகழ் நம்வழியே ஓங்கிநின்று,
நம் பின்னால் வரும் தலைமுறைகளாலும்
நன்றியோடு தூக்கிப்பிடிக்கப்பட்டு
இம் மண்போல்’ மரங்களைப்போல்’ காற்று வானத்தை’ நிலவினை
சூரியனைப்போல்’
இப் பிரபஞ்சமெங்கும் நிலைத்திருக்குமென்பதை
உணர்ந்தவனாய்
எனது ஆழ்ந்த இரங்கலைச் சொல்லி
விடைபெறுகிறேன்.. நன்றி..
வித்யாசாகர்
மாமனித௫க்கு அஞ்சலிப் பா இயற்றி வாசிக்கவைத்தமைக்கு நன்றி!!!
LikeLiked by 1 person
மிக்க நன்றியும் அன்பும் குரு…
LikeLike