உறவுகளுக்கு வணக்கம்,
மழையால் தவிக்கும் உறவுகளின் நிலையையெண்ணி மனசு பாடாய் படுகிறது.
முடிந்தவரை ஒருவருக்கொருவர் அக்கறைக் காட்டுங்கள். எவரவர் வீட்டில் மழை நனைக்காது ஒதுங்கி நின்றுக்கொள்ள இயலுமோ அவரவர் இடம் தந்து உதவுங்கள்.
எத்தனை காசு பணம் வைத்திருந்தாலும் இந்த உயிர் ஒருமுறை போனால் வராது; போகும் முன் உதவ முன்வாருங்கள்.
நம் ஒவ்வொருவராலும் நமக்குக் கீழுள்ளோருக்கு ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் உதவமுடியும், அதை செய்ய சிந்தியுங்கள். உடனே செயல் படுங்கள்.
இனி அரசு கடவுள் அவன் இவன் என யாரை எதிர்நோக்கியும் உடனடி பலனில்லை. தண்ணீர் கழுத்து வரை மூடியவரால் தலைமூடும் மற்றவரை ஒரு கையில் இழுத்து மேல்விடமுடியுமெனில் செய்து ஒரு உயிரைக் காப்பற்றுங்கள்.
உடலால் உதவி வருவோர், உணவு செய்து வழங்குவோர், மருத்துவ உதவி புரிவோர் போன்றோருக்கு அவசியப்படுகையில் பணத்தைமட்டும் வைத்திருப்போர்; அதையும் ஒரு உயிர்காக்கும் ஆயுதமென்று எண்ணி வேண்டுமிடத்தில் கொடுத்து நிறையுங்கள்.
இது மட்டும் தான் தருணம் நமது மனிதத்தைக் காட்டி நமை நாம் இயன்றவரைக் காத்துக்கொள்ள. எனவே விரைந்து உடனிருப்போருக்கு ஒருவருக்கு ஒருவரென எல்லோருமே தன்னால் முடிந்த உதவியைச் செய்து, இயலாமையில் பிறருக்கு உதவினேன் எனும் சின்னதொரு நிம்மதியையேனும் பெற்று மனதால் வானளவிற்கு நிமிர்ந்து நில்லுங்கள்.
மிக முக்கியம்; இது மழை, நாம் வேண்டி வேண்டி கேட்ட மழை. நீரில்லை மழையில்லை நதியோடவில்லை என்று நாம் கதறி கதறி யழுது சாபமிட்டதன்பேரில் கோபத்தோடுப் பெய்யும் பேய்மழை. இதை இனி இதோ நின்றுவிடுமென்று எண்ணி எண்ணி நாமே நிறுத்துவோம்.
எல்லோருமே மனதில் மழை நின்றுவிடும் என்று எண்ணுங்கள். விரைவில் நின்றுவிடுமென்று எண்ணுங்கள். இதோ நின்றுவிடும், இனி நமக்கெல்லாம் ஒன்றும் ஒரு கேடும் விளையாதென்று மனதால் உறுதியாக நம்புங்கள். எல்லோரின் ஒன்றுகூடிய எண்ண வலிமையால் கண்டிப்பாக இந்த மழையை நம்மால் நிறுத்தமுடியும்.
இயற்கைப் பெருஞ்சக்தி எல்லா உயிர்களையும் தீமையிலிருந்துக் காத்து நன்மைக்காய் விரைந்து இடம்பெயர்க்கட்டும்..
நன்னீர் பெருகப்பெருகநிலைகுலையா வளத்தோடு நிலைத்துஎம்மக்கள் நீடு வாழி தாயே..
————————————————————————
வித்யாசாகர்
மின்தடை, இணையமில்லை, தொலைபேசி தொடர்பில்லை, விளக்கில்லை, உணவில்லை, நீரில்லை, நீரால் மூழ்குகிறது மண். ஆனாலும் உயிர் இருக்கிறது எல்லோரிடமும். மழையை நிறுத்தி அதைக் காத்துக்கொள்வோம்..
மழை நிற்குமென்று எல்லோரும் எண்ணுங்கள். நிற்கும். கண்டிப்பாக நிற்கும். காரணம் இதெல்லாம் நாம் கேட்டு, நாம் வேண்டி, நாம் வழியேற்படுத்தி பெய்யும் மழையன்றி வேறில்லை..
வித்யாசாகர்
LikeLike
வணக்கம்
அண்ணா
இயற்கை அன்னை கோபித்தால் என்னதான் செய்முடியும்..
உண்மைதான் உதவுவது மனித பன்பு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLiked by 1 person
நன்றிப்பா..
LikeLike