கருநாடகா ஐந்து கோடி, பீகார் ஐந்து கோடி, மோடி ஆயிரம் கோடி, நம்ம லாரன்ஸ் ஒரு கோடி, தெலுங்கு நடிகர்கள் பலர் லட்ச லட்சமென ஒன்றுகூடி கோடியை நோக்கிச் செல்கின்றனர்.
மம்முட்டி ஒரு பட்டியலையிட்டு தன் மனக்கதவோடு பல இருப்பிடங்களை சென்னையில் திறந்துவிட்டிருக்கிறார். சத்தியம் திரையரங்கம் மற்றும் சில கல்லூரிகளும் திருமண மண்டபங்களும் அவசர உதவிக்கு மனிதாபிமானத்துதோடு தன் வாசலைத் திறந்து உறங்க இடம் தந்திருக்கிறது.
என்றாலும், சென்னையின் நன்றிக்குறிய நிறையக் கோடிகளைக் கேட்டு கையேந்தி நிற்கிறது வீடுதோறும் தேங்கிய மழைநீரும் இனி வரவிருக்கும் மழைத்தொற்று நோய்களும்..
உதவி என்பது உயிர்க்கேட்டு நிற்கும் இவ்வேளையில் எங்கே போனார்கள் நம் அரசியல், திரைத்துறை, மருத்துவம், வியாபாரம் மற்றும் இதர பல தொழில்சார்ந்த ஜாம்பவான்களெல்லாம் ?
வெளியே வாருங்கள். வெட்கமின்றி வெளியே வாருங்கள். பணமுள்ளோரே; உதவிசெய்வதற்கு நெஞ்சுரமேன்? நெஞ்சிலீரம் உண்டென்றுக் காட்ட தயங்காது வந்துவிடுங்கள். நாளைக்கே மழை நினைத்தால் உங்களையும் மூழ்கடிக்கலாம்.
சென்னையே மிதக்கிறதெனில் நாமெல்லாம் எவ்வளவு..?
இருப்போர் இல்லார்க்குக் கொடுத்து உதவாததைவிட பச்சைதுரோகம் உலகிலறிய வேறில்லை..
உண்மையில்; இளைஞர்களும், நினைத்ததுமெடுத்துக் கொடுத்துவிட இயலாதோறும் தெருவில் இறங்கி இரைஞ்சும் மனநிலை பணமிருப்போருக்கெல்லாம் இம்மியளவு இருந்துவிட்டால் போதும்; இயற்கையின் இப்பேரிடரை நாம் நம் மனிதத்தால் இலகுவாக கடந்துவிடலாம்..
மனிதம் கொள்ளுங்கள். பணமிருப்போரே மனிதத்தோடு சிந்தியுங்கள். பணத்தை உதவிக்கு விதைத்துச்செல்லுங்கள், நாளை பணம் இரட்டிப்பாய் விளையும் நம்புங்கள்!!
வணக்கம்
அண்ணா.
நன்றாக சொல்லியுள்ளீர்கள் சரியான சாட்டையடி….
நடிகர்களின் படத்துக்கு அபிஷேகம் செய்தார்கள் அந்த நடிகர்கள் எங்கே
குஷ்ப்புக்கு கோயில் கட்டினார்கள் குஷ்ப்பு எங்கே.?
எல்லோரும் வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டுக்கு வந்து வசதியாக உள்ள பணக்காரன் எங்கே… யாரும் உதவவில்லை… மக்கள் இனி புரிந்து கொள்ள வேண்டும்…….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆமாம்பா.. இனி மாறுதல்கள் நிகழும்!