இயற்கையின் சீற்றத்தை இயற்கையே மாற்றிக்கொள்ளும். என்றாலும் இழப்பு இழப்புதான் என்பதில் எல்லோருக்குமே வருத்தமுண்டு. ஆனால் ஒரு மரத்தை பிடுங்கியதன் கோபம் கூட இந்த மழைக்கு உண்டெனில் அதன் கோபமும் நியாயம்தானே? அப்போ நம் நிலை? நம் நிலையென்ன, நம் நிலை இனி இயற்க்கைக்கு ஒத்தாற்போல மாறவேண்டும். ஒரு மரம் பிடுங்கினால் இரண்டு மரத்தை நடும் தர்மம் நம் வாழ்க்கையோடு நமக்கு வசப்படவேண்டும்.
இம்முறை மழை நமக்குக் கற்றுத்தந்த பாடத்தைக் கொஞ்சம் நாமும் நினைவில் கொண்டு, மழைநீர் சேமிப்புத் திட்டம்போல, இனி மழைக்கால பாதுகாப்பு திட்டங்களையும் வெகுவாகக் கற்றுக்கொள்ளல்வேண்டும். முற்றிலும் சரிக்கு ஈடாக பல முன்கூட்டிய அறிவுசார் திட்டங்களை வகுத்துக்கொள்ளவேண்டும். ஏரி குளம் ஆறு என தக்கவாறு அமைத்துக்கொள்வதும், தூர்வாரி நீர்நிலைகளை சீர்செய்துக் கொள்வதுமாய் இனி மழை குறித்தும் புயல் குறித்தும் ஒவ்வொரு காலநிலை குறித்தும் முன்னாட்களைப்போலவே நாம் கூடுதல் கவனமாகவே இருத்தல் வேண்டும்.
இங்கே அந்தளவு மழை வராதுதான் என்றாலும், வந்துவிட்டால் எனும் கேள்வி இனி நமக்குள் எப்போதும் இருக்கும்தான் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் கால ஓட்டத்தில் இதையும் கடந்துபோய் அடுத்துவரும் தலைமுறைக்கு மீண்டும் இச்சிக்கலை நாம் விட்டுச்செல்வோமெனில் பின் நாமும் குற்றவாளிகளே.
வாழ்க்கை என்பது வெவ்வேறு. அவரவர் சுற்றம் சூழல் மனிதர்கள் எண்ணம் என அவரவருக்கு மாறுபடுவது. ஆனால் நாம் வாழுமிந்த இயற்கைச் சூழல் எல்லோருக்கும் ஒன்றுதான். அது எல்லாம் வல்லது. வீரியம் மிக்கது, அதை எதிர்ப்பதைக் காட்டிலும் அதோடு சேர்ந்து வாழப் பழகிக் கொண்டால். வீட்டை எரிக்கும் அதே நெருப்பு வீட்டிற்கு விளக்காயும் இருப்பதைப்போல; தலைமூழ்கி உயிரை வாங்கும் அதே தண்ணீர் உயிராகி நம்முள் ஊறியும் கிடக்கும்..
மாற்றம் இயற்கையின் இன்னொரு பங்காக வாழும் நம்மிடமே இன்னும் நிறைய தேவை. அத் தேவைக்குச் சிந்திப்போம். மெல்ல மெல்ல அது புரிகையில் இயற்க்கை நிச்சயம் நம் நலத்திற்கு வேண்டியும் அதுவே தானாக இயங்கிக்கொள்ளும்.
அதன்பொருட்டு; நலம்சூழ்ந்த வாழ்வும் வளமுறும் சுற்றமும் எல்லோருக்கும் வாய்க்குமாகலாம்.. எல்லோருக்கும் வாய்க்க வாழ்த்து!!
வித்யாசாகர்
கடவுளே! கண் திறந்து பாராயோ!
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html
LikeLiked by 1 person