1
படபடவென
புத்தகத் தாள்கள் போலவே
படபடக்கிறது மனசு;
ஒவ்வொருப் பக்கத்திலும்
எழுதிவைத்துக்கொள்கிறேன்
உனது சிரிப்பை..
——————————————————————————-
2
ஒவ்வொரு
நட்சதிரங்களையும்
உடைத்து உடைத்து –
வேறென்ன செய்யப்போகிறேன்
உன் –
பெயரெழுதுவதைத் தவிர..
——————————————————————————-
3
முன் பேருந்தில் நீ
பின் பேருந்தில் நான்,
படியேறி
படியேறி நிற்கிறது மனசு
உன்னிடம்..
——————————————————————————-
4
நீ நிலா அல்ல
நதி அல்ல
அன்னமோ தென்றலோ அல்ல
ஆனால் எல்லாமே நீ
ஏனெனில் அது நீ..
——————————————————————————-
5
தண்ணீரை கலைக்கிறேன்
உன் முகம் தெரிகிறது;
மீண்டும்
தண்ணீரைக் கலைக்கிறேன்
உன் முகம் தெரிகிறது;
அம்மா ‘என்னடா பைத்தியமா உனக்கு’
என்கிறாள்,
நான் இல்லையென்றெல்லாம்
சொல்லவில்லை,
மீண்டும் தண்ணீரைக் கலைக்கிறேன்
உன் முகம் பார்க்க!!
——————————————————————————-
வித்யாசாகர்