எழுதுவது தவம் எனில் எழுத்தது மதிக்கப்படுவதே வரமில்லையா? அப்படி எனது எழுத்திற்கு தொடர்ந்து மாதந்தோறும் வரம் தரும் சாமி நம் “இலக்கியவேல்’ இலக்கிய இதழ்.
நன்னடத்தையும் சமூக ஒழுங்கு குறித்த அக்கறையும் தமிழ்மீது தீராப் பற்றும் கொண்ட, நான் அதிகம் விரும்பும் கவிஞர்களில் ஒருவரும், மதிக்கும் மனிதரில் ஒருவருமான திரு. சந்தர் சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, ஐயா உயர்திரு. கவியோகி வேதம் அவர்களின் முன்னிலையில் தமிழகத்தில் மாதந்தோறும் வெளிவருமிந்த பல்சுவை இலக்கிய இதழினை வேண்டுவோர் chandarsubramanian@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
நெடுநாட்களாக நமது நேர்காணல் குறித்து பேசி பேசி மாதங்கள் தள்ளிப்போயின. இம்முறை ஐயா அவர்களை மதிக்கும்விதமாக இன்று முடித்தேதீருவது என எண்ணி மனதில் பட்டதை மறைக்காது அறத்தோடு நின்று எண்ணியதை எண்ணியவாறு கொடுத்த பதில்களே இந்த நேர்காணல். எனவே ஏதேனும் தவறிருப்பின் பொருத்தருள்க.
கருத்து என்றுப் பார்க்கையில் பலருக்கு பலவாக எண்ணங்கள் வேறுபடலாம். எது எதுவாயினும் மொத்தத்தில் மனிதம் தேடுபவனின் பார்வையிது என்பதை மட்டும் மனதில் கொள்ளவேண்டிக் கேட்டவாறு, எனை படிக்கும் வாழ்த்தும் ஆசிநல்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றியை முன்வைத்து விடைபெறுகிறேன்..
இனிய கைகூப்புடன்..