இந்த உலகத்திற்கு
அழகற்ற
நிறைய கண்களுண்டு,
ஆணென்றும்
பெண்ணென்றும்
தூக்கி இறக்கி
தூக்கி இறக்கி
நம்மை அசிங்கமாகவே பார்த்துக்கொண்டிருக்கும்,
ஒவ்வொரு வட்டமாய்
நாம் ஓடி ஓடி வந்துநிற்க
உன்னையோ
என்னையோ
கீழ்தள்ளியே கைக் கொட்டும்
இருவர் காதுகளிலும் வந்து
இருவருக்கும்
தோல்வியையேச் சொல்லித்தரும்
எல்லோரும்
உலகத்தின் பின்னாலையே
ஓடுகிறார்கள்
நாம் தான் காதலிக்கக் கற்றுக்கொண்டோமே
நம் காதல் பார்
ஒரு படி மேலேறி
அதோ அந்த உலகை
நமக்குக் கீழிருப்பதாகவே காட்டுகிறது..
——————————————————————–
வித்யாசாகர்