யாரிடம் பேசினாய் இப்போது
என்றார் அவர்
நானா.. ?
எனது அம்மாவிடம்
பேசிக்கொன்டிருந்தேன் என்றேன்
இல்லையே
ஏதோ மனைவியிடம்
பேசுவது போலிருந்ததே என்கிறார் அவர்
நான் சிரித்துக்கொண்டே
ஓ அதுவா
அதனாலென்ன
எனக்கு அம்மாவும் அவள்தான்
மனைவியும் அவள்தானென்றேன்..
ஒரு கிளையில்
குருவியொன்று இலைகளை விளக்கிக்கொண்டு
எனை எட்டிப் பார்த்தது
கீழ்விழுந்த இலையொன்றை எடுத்து
எழுதிப் போட்டது
எனக்கும் அவள்
அம்மா போலென்று!!
——————————————————————–
வித்யாசாகர்