உனக்கான மழைத்துளிகள் தான்
இந்த வனமெங்கும் பெய்கிறது,
உன் மௌனத்தில் கரைந்தொழுகும்
கண்ணீராகவும்
உனது சிரிப்பில்
பூச்சொரிக்கும் மலர்களாகவும்
நீ பேசுகையில்
இசையும் நரம்புதனில் உணர்வாகவும்
உனைப்பார்துக் கொண்டே இருக்கையில்
உயிர்த்திருக்கும் நினைவுடனும்
உனைக் காணாத பொழுதுதனில்
சலனமற்று கிடக்கும் நதியின் முகாந்திரமாகவும்
நீ மட்டுமே எனக்கான
மழைத்துளிகளாய்
இவ்வனமெங்கும் பொழிகிறாய்
இந்த வனத்திற்கு நீயிருக்கையில்
நானென்று பெயர்,
நீயில்லா கணமொன்றில் பிணமென்றும் பெயராகலாம்!
———————————————————
வித்யாசாகர்