நாவினால் தொட்டாலும் இனிக்கும்
தொடாது பார்த்தாலும் அழகு சொலிக்கும்
அண்டம் பேரன்டமென ஆராய்ந்துப் பார்த்தால்
அங்கே மூத்த நரைகொண்டு ஒரு சொல்லேனும்
தமிழில் அமர்ந்திருக்கும், அத்தகு தாய்மொழி தமிழுக்கு என் முதல்வணக்கம்..
அசோக சக்ரவர்த்தி யென்ன
அத்தனைப் பெரிய வீரரா? ஆமெனில் வந்து எமது
அசோக் கவிஞரிடம் தமிழ்பாடி வெல்லட்டும்
ஒரு கவி பாடி ஓயட்டும்,
சற்றும் சாயாது வாழும் தமிழை
சொல்லாலே முத்தமிடும் அருங் கவிஞர்
தமிழ் பாவாலே எமையழைக்க
நாவழகு கொண்ட நற்றமிழ் தொண்டர்
தலைவர், திரு. அசோக் அவர்களுக்கு பேரன்பு வணக்கம்!
எமது தீந்தமிழ் சொல்லெடுத்து
தேரழகு பூட்டியொரு
பா வகையை பயிற்றுத் தந்த
எம் அருந்தமிழ் பெரியோர்களுக்கு வணக்கம்..
இடையிடையே வந்து
தாகத்திற்கு நீரருந்தும் வானம்பாடியை போல
ஏக்கம் கூடுகையில் வந்திங்கு பாட்டருந்தி போகிறேன்
உங்களின் சொற்களை மிகுந்த சிநேகத்தோடு காண்கிறேன்
நலம் நலமறியும் ஆவலை காண்பித்துக் கொள்ளாமலே
உங்களில் ஒருவராகவே வாழ்கிறேன், கருத்திடாமைக்கும், சொல்லிடாத வணக்கத்திற்கும் மன்னித்து அன்பை மட்டுமே ஏற்பீர்களாக..
அன்புடையோர் அனைவருக்கும், நட்புள்ளம் கொண்ட சினேகவெளியில்
கவிதை கடலாக தனித்திருக்கும்
எனதன்பு படைப்பாளிகளுக்கு தீரா பாசம் மிகு மதிப்பான வணக்கம்!!
இதோ “சித்திரக்கவிதை” கவியரங்கத்தில் பகிர்ந்துக்கொண்டது..
நன்றியுடன்..
வித்யாசாகர்
பிங்குபாக்: சந்தவசந்தத்தின் இணையக் கவியரங்கம்.. – TamilBlogs