உயிர் வளர்த்த ஆலமரத்திற்கு விழுதுகளின் பேரன்பு வாழ்த்து..
உரமென சொற்களைச் சேர்த்து பாலமுதும் தேனமுதுமாய் அறிவையும் இனிக்க இனிக்க ஊட்டி, நிலத்தில் எங்கள் கால்கள் நிலையாய் ஊன்ற வயிற்றில் இடம் தந்தவளுக்கு நன்றி..
குறுக்கும் நெடுக்குமாய் அறுத்தாலும் குருத்தோலைக்கு வலிக்காமலிருக்க வலியை தானே சகிக்கும் தாய்ப்பனைகளுக்கு எந்தச் சொல்லெடுத்துச் சொல்வது வானளவு வாழ்த்துதனை.. ?
இது அவள் தந்த வீனை, அவளழகை பாட, அவளிசையை மீட்ட, அவளுக்கான சப்தமாய் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும் அம்மா அம்மாவென்று..
வேர் ஊன்றியவளே, உன் பாதம் தான் எங்களுக்கு ஆலய கலசம்போல, உனது கர்ப்பப்பை தான் எங்கள் கோயில், நீ மட்டுமே என்றென்றும் எங்களுக்கு சாமி..
சாமிக்கென்ன வாழ்த்து; வெறும் வணங்கிக் கொள்கிறோம் உன் பிள்ளைகள் வாழ நீயிருந்து வாழ்த்திக்கொண்டேயிரு முடிவற்றவளாய்..
ஆதியும் மூலமும் வேரும் நீதானே, உனது விரல்பிடித்தே பிடித்தே மகிழ்வோடு தீரட்டும் இவ்வாழ்வு, இந்நாள் போல எந்நாளும் உனக்கே முதல் வணக்கம் உனதே முதலன்பும்..
வாழ்க அம்மா.. வாழிய அம்மாக்கள்.. அன்னையருக்கு அரும்புகளின் பெருவாழ்த்து!!
வித்யாசாகர்
புகைப்படம் கவிதைக்கு நன்றாக பொருந்துகிறது … ! ..அருமை.!
2018-05-13 12:24 GMT+03:00 வித்யாசாகரின் எழுத்துப் பயணம் :
> வித்யாசாகர் posted: “உயிர் வளர்த்த ஆலமரத்திற்கு விழுதுகளின் பேரன்பு
> வாழ்த்து.. உரமென சொற்களைச் சேர்த்து பாலமுதும் தேனமுதுமாய் அறிவையும் இனிக்க
> இனிக்க ஊட்டி, நிலத்தில் எங்கள் கால்கள் நிலையாய் ஊன்ற வயிற்றில் இடம்
> தந்தவளுக்கு நன்றி.. குறுக்கும் நெடுக்குமாய் அறுத்தாலும் குருத்த”
>
LikeLiked by 1 person
வாழ்க ஐயா..
LikeLike