பெண்களின் தூர நாட்கள் பரிச்சயமுண்டா ?
பெண்களின் தூரம் நிற்கும்
வேதனையை அறிந்ததுண்டா ?
பெண்ணின் பிரசவ நாட்களை
அருகில் சென்றுக் கண்டீரா ?
பெண்களை பெண்களாய் உணர்ந்தீரா ? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..
ஆண்’ அப்பனென்றால் வலிக்கிறது
ஆண்’ பிள்ளை என்றால் தவிக்கிறது
ஆண் அண்ணனோ தம்பியோ யெனில்
மனது சுமக்கிறது,
கணவனென்றால் இடைவெளி இருக்கலாமா?
ஆணென்றோ பெண்ணென்றோ சபிக்கலாமா? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..
ஐந்து வயது பெண்ணை காமத்திற்கு
தெரியவில்லை,
அடுத்தவர் மனைவியை காமத்திற்கு
தெரியவில்லை,
ஆழிசூழ் உலகே காமத்தை கடந்து
காதலிப்பாயா? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..
அடிக்கவும் எரிக்கவும்
சாதியால் முடிகிறது,
அன்பையோ நட்பையோ சாதியே பிரிக்கிறது,
அன்னமோ தண்ணியோ சாதியில் தெரிகிறதா ?
ஒரு சொட்டு ரத்தமேனும்
சாதியால் சுடுகிறதா? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..
இலக்கு தெரியவில்லை
சுயனலமொன்றே எழுகிறதா?
இயக்கமோ இலக்கியமோ
சுயனலத்திற்கென்றே அரும்புகிறதா?
இன்சொல் வன்சொல் எங்குமே
நான் நான் நானா? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..
பயம் நெஞ்சை பிளக்கிறதா ?
ஆசை நெஞ்சை அடைக்கிறதா ?
பொறாமைத் தீ தலைமேல் ஏறி சிரிக்கிறதா ?
கோபம் காண்பவரையெல்லாம்
வதைக்கிறதா ? காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர்..
காதலொரு தீ
நீதி விளக்கேற்றும் தீ
தீண்டாமை பேதமொழித்து
ஞான விளக்கேற்றும் தீ,
மேல்கீழ் எரித்து சமநிலை பயக்கும் தீ
மொத்தமாய் நமை விழுங்கும் பேராழி
அனைத்தையும் விழிங்கிகொண்டு அன்பாக மட்டுமே
வெளிப்படும் பிம்பம்
மனதின் இனியமொழி காதல்;
எனவே காதல் செய்வீர்
உலகத்தீரே காதல் செய்வீர், அன்பு அது ஆதலால்
காதல் செய்வீர்..
காதல் செய்வீர்..
————————————————
வித்யாசாகர்
பிங்குபாக்: ஆதலால் காதல் செய்வீர்.. – TamilBlogs