பேரன்பு கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இனிப்புத் தமிழ் வணக்கம்..
இது தான் சென்ற மாதம் 20.08.2018-ஆம் திகதியன்று இலங்கையின் தாருஸபா தொலைக்காட்சியின் மூலம் அன்புத் தம்பி திரு. றின்சான் அவர்கள் கண்ட நேர்காணல்..
இந்தச் சந்திப்பில், குறிப்பாக எமது குவைத்வாழ் தமிழர்கள் சார்பாகவும், உலக தமிழர்கள் சார்பாகவும் நிறைய உயர்க்கருத்துகள் பரிமாறப்பட்டுக்கொண்டன. இரண்டாம் பகுதியில், அதாவது இறுதி பகுதியில் மிக முக்கியமாக இச்சமூகம் குறித்து நிறைய விடயங்களை பகிர்ந்துக்கொண்டோம். சாதியின் மனக்கீறல்கள் குறித்தும், பெண்களின் சாய்நிலை நீதி பற்றியும் எண்ணற்ற விடயங்களை பகிர்ந்துக்கொண்டோம். அன்புள்ளங்கள் எல்லோரும் பார்த்து கருத்துக் கூறுங்கள்.
அன்று பல வேலைகளினூடே அலைச்சலினூடே ஓடிச்சென்று கேள்விகளின் முன் அமர்ந்தாலும் எந்த சமரசமும் இன்றி, முன்னேற்பாடும் இல்லாமல், நேரடியாக நிகழ்ச்சியில் அமர்ந்து மனவோட்டப்படி பேசிக்கொண்டோம்.
என்றாலும், இவ்வளவு வெளிப்படையாகப் பேசவும், உரிய நேரமெடுத்துக்கொள்ளவும் நிறைவான வாய்ப்பையமைத்துத் தந்த தாருஸபா தொலைக்காட்சி நிறுவனத்திற்கும்,அதன் உரிமையாளர் பேரன்பிற்குரிய “அல்-உஸ்தாத் மௌலவி சபா அவர்களுக்கும், தம்பி திரு. ரிம்ஸான் அவர்களுக்கும் நிறைந்த நன்றியும் வணக்கமும்..
எனது முகநூல் சொந்தங்கள் அனைவருக்கும், உலக தமிழ் உறவுகள் அனைவருக்கும் உளம்பூரிக்கும் நன்றியும் வணக்கமும்..
வித்யாசாகர்
பிங்குபாக்: வித்யாசாகரின் “சமத்துவம் போற்றும் சமூகப்பார்வை” (நேர்காணல்) – TamilBlogs