காணொளி – https://youtu.be/UMFMJG8CWrM
//மலேசியாவின் பினாங்கு மாநிலத்து துணை முதல் அமைச்சர் மேதகு ராமசாமி அவர்களிடமிருந்து குவைத் நாட்டிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வந்து ஆய்வறிக்கை வாசித்த கவிஞர் எழுத்தாளர் பன்னூல் பாவலர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு அவருடைய இலக்கியப்பணியையும், பாடல்களையும், சிறுகதை, கட்டுரை, கவிதைகள் என அவரது இருபது வருட எழுத்துப்பணியை பாராட்டி 24.02.2019-ஆம் நாளன்று உலகளாவிய முறையில் “தமிழ் படைப்பிலக்கியச் செம்மல்” எனும் உயர் விருதினை கொடுத்து மலேயா பல்கலைக் கழகம், ஓம்ஸ் அறக்கட்டளை மற்றும் தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்புகளின் மூலம் நடந்த “உலக திருக்குறள் மாநாட்டில்” பெருமை செய்யப்பட்டது.
மேலும் அவரது தாயார் திருமதி. கெம்பீஸ்வரி அம்மாள் அவர்களுக்கு முதல்வர் அவர்கள் பொன்னாடைப் போர்த்தி மேடையில் தாய்மை மதிப்புறச்செய்ய அரங்கம் ஆத்மார்த்த நன்றிகளால் மனம் பூரித்து மகிழ்ந்தது.
அதுவல்லாது, 23.02.2019 திகதியன்று கவிஞர் மற்றும் எழுத்தாளர் திரு. வித்யாசாகர் அவர்கள் எழுதிய “வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்” எனும் கட்டுரைத் தொகுப்பு புத்தகமும், அம்மா பற்றிய நினைவுப் பாடல் ஒன்றின் குறுந்தடும் ஒருங்கே மேடையில் அவருடைய தாயார் கரங்களால் வெளியிட உலகறிந்த இதயநல மருத்துவர் ஐயா சொக்கலிங்கம், தமிழ்திரு வா.வு.சி பெயரன் ஐயா முத்துக்குமார சுவாமி, வகுப்பறை பதிப்பகதின் நிறுவனர் பரிதி, மலேசிய அரசு பள்ளிக்கூடத்தின் ஆசிரியை திருமதி. உமா கணேசன் மற்றும் தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் திரு உடையார் கோயில் குணா அவர்களும் பொருளாளர் சிவகாமி குணா அவர்களும் உடனிருந்து புத்தக பிரதிகளையும் அம்மா பாடலின் குறுந்தகட்டையும் பெற்றுக்கொண்டனர்.
அரங்கம் கரவோசையினாலும் அம்மாப் பாடலின் உருக்கத்தாலும் மெய்மறந்து பாராட்டி தமிழரின் உயர்பண்பு மாறாமல் கௌரவித்து மகிழ்ந்தது//
அந்த ஒரு நாள், அந்த ஒரு மேடை, அப்படியொரு சமூக உணர்வுள்ள, மக்களின் விடுதலைக்கு போராடுமொரு முதல்வரோடும், அம்மாவோடும், தம்பி தங்கைகள் தோழர்கள் எண்ணற்ற நாடுகளிலிருந்து வந்திருந்த அறிஞர் பெருமக்கள், பல வெளிநாட்டு பல்கலைக் கழகங்களிலிருந்து வந்திருந்த பேராளர்கள் என எதுவொன்றும நினைவிலிருந்து நீங்குவதேயில்லை.
உலகளாவிய ஒரு பொதுநிகழ்வு தன்னில் ஏற்படும் சில புரிதல் கோளாறுகளால் சில விடயங்கள் திசைதிருப்பிவிடுகிறது. மாற்றம் மனதை தைத்துவிடுகிறது. அதை மறுப்பதற்கில்லை என்றாலும் மனதளவில் மொழியாலும் இனத்தாலும் எல்லோரும் ஒருங்கே இணைந்தேயிருந்தோம், தமிழால் அன்றும் உயர்ந்தோம் என்பதே நிறைவு.
எங்கோ கடல் கடந்து வந்தோம் என்றில்லாது எமது உறவுகளோடு இணைந்திருந்த பெருமையும் நிறைவும் உண்மையிலேயே மனது நிறைந்திருக்கிறது.
மாநாடு முடியும் இரண்டாம் நாள் மாலையில் மலேசிய எழுத்தாளர் சங்கத்திலும் எல்லோரையும் மதிப்புசெய்து உணவளித்து எமது விருந்தோம்பல் பண்புதனை மெய்ப்பித்த எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு குறிப்பாக ஐயா பெ. ராஜேந்திரன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மூத்த உறுப்பினர்கள் பெரியோர்களுக்கு எல்லோருக்கும் நன்றி.
எல்லாம் சிறக்கும் இனி. எல்லாம் மறப்போம். இன்னும் ஓரிரு தினங்கள் ஆனால் குறைகள் சில மறையும், நிறைகளே காலத்திற்கும் விசாரமாப பரவியெங்கும் பெருமையோடு நிற்கும். குறைகளை இனி வரும் காலங்களுக்கான பாடமாக ஏற்போம். நிறைகளை நட்பு இறுக நெஞ்சில் சுமப்போம்.
அம்மாவை எங்களை எத்தனை பெரிதாகக் கொண்டாடி மகிழ்ந்தீர்கள் மதிப்பு செய்தீர்கள் அதன் நன்றி பெரிதாய் இந்த மலேசிய மாநாடு குறித்தும் மலேசிய மக்கள் குறித்தும் மனம் முழுக்க உண்டு.
கூடுதலாக, இத்தனை பெரிய கனத்தை கன மேடையை நமக்கு ஐயா முதல்வரின் பேச்சோடு வழங்கிய திரு. ஓம்ஸ் தியாகராசன் ஐயா மற்றும், ஐயா திரு. மன்னர்மன்னன், ஐயா திரு. கிருஷ்ணன், ஐயா திரு. முல்லைசெல்வன், முக்கியமாக இதற்கெல்லாம் காரணமாக இருந்து நமக்கு வள்ளுவனை வழங்கி “அ” போட்ட ஐயா வி.ஜி.சந்தோசம் மற்றும் மொத்த மாநாட்டிற்கும் முதற்புள்ளியாக இருந்து சற்றேறக்குறைய ஆறு மாதங்களாக உழைத்த எனதன்பு சகோதரர் கண்ணியத்தின் திருவுளம் உடையார் கோயில் குணா மற்றும் தங்கை சிவகாமி அவர்களுக்கும் நன்றி.
அதோடு, இந் நிகழ்ச்சி நெறியாளர்கள் பங்காளர்கள் மற்றும் பின்னாலிருந்து உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியெனும் சொல் மிகச் சிறிது.
முக்கியமாக, பெருந்தன்மையாக இருந்து விழாவை சிறப்பித்த அனைத்து நாடுகளிலிருந்தும் வந்திருந்த பேராளர்கள் சகோதர உறவுகள் மற்றும் ஐயா சொக்கலிங்கம், ஐயா இலக்குவனார், ஐயா ஜெயராம் சர்மா, ஐயா முத்துகுமார சுவாமி, ஐயா சி.கே. அசோக்குமார், பேராசிரியர் திரு. முருகன், ஐயா.திரு. நடராச கணபதி, ஐயா.திரு. பெரியண்ணன், ஐயா திரு. அன்வர், தோழர் திரு. பரிதி, சிட்னியிலிருந்து வந்திருந்த உதயசூரியன் தமிழேட்டின் ஆசிரியர் மற்றும் பெயர் சொல்லி அடங்காதளவு வந்து பெருமைச்சேர்த்த எனது அக்கா தங்கைகள் பேராசிரிய பெருந்தகை அம்மையர்கள் அனைரையும் மீண்டுமொருமுறை இருகரம் கூப்பி நெஞ்சாரப் போற்றி நன்றியோடு வணங்கிக் கொள்கிறேன்.
எப்போதும் இணைந்தேயிருப்போம் இன்னும் பல மேடைகளில் சந்திப்போம்.
பேரன்புடன்..
வித்யாசாகர்
Great to know this! God is with You all!
LikeLike
நன்றி ஐயா.. வாழ்க..
LikeLike
பிங்குபாக்: வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வாழ்க்கைப் பாடல்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்