அன்பினிய உறவுகளே..,
இதோ, நமது முகில் படைப்பகத்தின் புதியதொரு பாடல். வெளிநாடுவாழ் தமிழர்களின் மனிதர்களின் வலி சுமந்த பாடல்.
ஆயிரம் வெற்றிகளும் கொண்டாட்டங்களும் நம்மிடையே இருந்தாலும், ஊரில் வீடு கட்டுவதும், திருமணம் செய்வதுமாய் பல அரிய மாற்றங்களே நிகழ்ந்தாலும், அவைகளைக் கடந்தும் ஒரு வலியுண்டு. தனது வாழ்வை தனக்கே தெரியாமல் தொலைத்த வலியது.
ஒரு தனிப்பட்ட மனிதனின், ஒரு கணவனின், அப்பாவின், அண்ணன் தம்பிகளின் ஏக்கத்தையும், கத்தமாவாகவே வளைகுடா நாடுகளில் தனது வாழ்வை தொலைத்துவிட்டு கனமான இதயத்தோடு வாழும் எமது சகோதரிகளின் தலையணை நனையும் கண்ணீரும் தான் இங்கே பாடலாக இசைகோர்க்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=8PZxsp3a9X0
கேட்டு நிறைவீர்கள் எனும் நம்பிக்கையுடன்..