குறும்படம் – பஞ்சக் கவிஞன்
தன்மை – தண்ணீர் தட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முனைப்பு கதை
வெளியீடு – டிவிஎஸ் (TVS) ஐதர் குழுமம், குவைத் சோசியல் மீடியா மற்றும் முகில் கிரியேஷன்ஸ், குவைத், 25.07.2019 அன்று
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – இயக்குனர் திரு. ரஷீது அமித்.
படப்பிடிப்பில் உதவி – திரு. இதயத்துள்ளா (குவைத் சோசியல் மீடியா)
நடிகர்கள் – கவிஞர் திரு. நம்மப்பாட்டு மாணிக்கம், கவிஞர் திரு. கார்த்திக், புகைப்படக் கலைஞர் திரு. இதயத்துள்ளா மற்றும் கவிஞர் திரு. வித்யாசாகர்.
Great service! Great awakning! Well done!
LikeLike
மிக்க நன்றி ஐயா..
LikeLike
தொழிலாளர்களை தனது குடும்பமாக பாவித்து தனது மகிழ்வை தன் நிறுவனம் சார்ந்தோரோடுப் பகிர்ந்துகொண்டு யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமென ஆத்மார்த்தமாக நன்மையைப் பரப்பி எல்லோரும் மகிழ்வோடு வாழ விரும்பியே தன் வாழ்வைச் செறிவோடு ஆக்கிக்கொண்டு அங்ஙனமே எளியோரையும் மாற்ற முயலும் ஒரு நல்ல மனிதரோடு மனதால் கூடி அன்பொழுக நின்றதில் மகிழ்வுற்றேன்.
தன்னுடைய தொழிலாளர்களுக்கு தங்கமும், பத்து வருடம் நிறைந்தோருக்கு ஐந்து லட்சம் பணமும், மேலாளராக நின்று நிறுவன வளத்தை உயர்த்திய மேலாளருக்கு ஒரு மகிழுந்து வழங்கி, அம்மேடையில் கலைக்கும் மரியாதை தரும் வகையில் எங்கள் தம்பி திரு. ரஷீது இயக்கிய குறும்படத்தையும் வெளியிட்டு தண்ணீர் தேவையை இந்த பிரபஞ்சம் தோறும் பரப்ப தனது அலுவலகத்தையே ஒரு நாள் படமெடுக்க தந்து உதவி எல்லோரின் கனவுகளையும் தனது கண்களில் சுமந்துக் கொண்டு காணும் தலைசிறந்த மனிதர் ஒருவரோடு நட்பாயிருத்தலை வாழ்வின் கொடையாக எண்ணுகிறேன். வாழ்க ஐயா, TVS குழும நிறுவனர், முனைவர் தமிழ்த் திரு. ஐதர் அலி அவர்கள்.
LikeLike