பிரபல தென்னிந்திய எழுத்தாளர் வித்யாசாகரின் தலைமையில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு. சம்மாந்துறையில் களைகட்டிய கவியரங்கம்! 09.03.2019.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழா ஊடக வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் ஏற்பாட்டில் நாவலர் ஈழமேகம் பக்கீர்த் தம்பி நினைவரங்கில் ‘புறப்படு பெண்ணே பொங்கியெழு’ எனும் தலைப்பில் உலகறிந்த பன்முக ஆளுமை கவிஞர் எழுத்தாளர் நாவலாசிரியர் பாடலாசிரியர் வித்தியாசாகர் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் கவியரங்கம் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் றமீஸ் அப்துல்லா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா சிறப்பு அதிதிகளாக கதை சொல்லி டாக்டர் எம்.எம்.நௌஷாத் பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ்அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம். ரி.எம். ரிம்சான் பிரபல ஊடக வியலாளர் வி.ரி. சகாதேவராஜா இலக்கிய ஆளுமைகள் சமூக சேவை மகளிர் அமைப்புக்கள் பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கவியரங்கில் கவிஞர் திருமதி. றியாசா வாஹிர் கவிஞர் செல்வி. றிப்னா றியாஸ் கவிஞர் திரு. ஆசுகவி அன்புடீன் கவிஞர் திருமதி. யுகதாரிணி கவிஞர் திரு. எம்.எச்.அலியார் கவிஞர் செல்வி. மு.ஸாஹிரா பானு கவிஞர் திரு.கே.எம்.ஏ. அசிஸ் கவிஞர் திரு. அருளானந்தம் சுதர்சன் ஆகியோர்களின் கவிதைகள் அரங்கேற்றப்பட்டன.