நேற்று நம் பாடல் வெளியீடு செம்மையாக குவைத்தில் நடந்தது. வேறென்ன சொல்ல, இப்படியொரு மேடையை பாடலை இடத்தை எனக்கு நீங்கள் தந்ததாய் தான் உணர்கிறேன் அன்புறவுகளே.
இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு. ஹரி உத்ரா, இப்பாடலைப் பாடிய அருங் கலைஞர்கள் மண்ணிசை தம்பதியர் ராஜலட்சுமி செந்தில் கணேஷ், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்கள், கதாநாயகன் தம்பி சிவ நிசாந்த் மற்றும் இத்திரைப்பட கலைஞர்கள் உழைப்பாளிகள் அனைவருக்கும் எனது மதிப்புமிகும் நன்றி.
மிகக் குறிப்பாக இப்பாடலை வெகு சிறப்போடு எமது குவைத் தமிழரின் முன்னிலையில் மிக ஆர்ப்பரிப்போடு வெளியிட ஒரு பெருமேடையை அமைத்துத்தந்த “குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்திற்கும், அதன் பொருப்பாளர்கள், கொடையாளர்கள், குறிப்பாக ஒரு நல்ல மனங்கொண்ட மாமனிதர் திரு. ஹைதர் சகோ அவர்களுக்கும், உலக தமிழ்பேசுமென் நன்மக்கள், தோழமையுறவுகள் அனைவருக்குமெனது நன்றியும் வணக்கமும் உரித்தாகுக!!
தயைக் கூர்ந்து பாட்டு முழுசா கேளுங்க, பிடித்திருந்தா எல்லோருக்கும் பகிர்ந்துகொள்ளுங்க.
மிக்க அன்புடன்..
வித்யாசாகர்