ஒரு துளி
நம்பிக்கை போதும் ;
வாழ்க்கை கடல் போல விரிவதற்கு,
ஒரு நல்ல
செயல் போதும் ;
நம்பிக்கை வெற்றியாய் அமைவதற்கு,
துளி துளியாய் வாழ்வில்
சில லட்சியங்கள் போதும் ;
எண்ணங்கள் பெரிதாய் மாறுவதற்கு,
சின்ன சின்ன தியாகங்கள்
சின்ன சின்ன சேவைகள் போதும்
பிறப்பை முழுதாய் வெல்வதற்கு,
இந்த உலகில் எல்லாமே
துளி துளி தான்
நீயும் நானும் நம் உயிரும் கூட
ஒரு துளி தான்,
துளிக் காற்று தான் நீ
ஒரு சொட்டு உயிர் தான் நான்!!
வித்யாசாகர்