ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா…

வ்வொரு விதைக்குள்ளும்
ஒரு காடிருக்கும் என்பார்கள்
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்
ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே
மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள்,
 
கவலை விடு, நம்பிக்கைக் கொள்
பிணங்களுக்கு பூச்செண்டு யென்னும்
அவச்சொல் அழி,
மடிவது அத்தனையுங் குடும்பங்களென்று உணர்;
உயிர்ச்சொல் கொண்டு
நெஞ்சுக்குள் அடைமழையென சூழும்
கண்ணீரை அகற்று, மரணத்தை சபி;
 
விழும் ஒரு சொட்டுக்கண்ணீர்
கடைசிவிசும்பலின் சாட்சியென்று
சபதமெடு;
கைகோர்த்து நிற்கவோ தோள்புடைத்து எழவோ
எவரையும் தேடாதே;
உன்னால் மட்டுமே உன்னை உயிர்ப்பிக்கயியலும்;
நீ முயன்றெழுதலே
நீ பிறருக்கு செலுத்தும் முதல் நன்றி;
 
நீயும் நானும் வேறல்ல
நமக்குள் உயிர் ஒன்றுதான்
அதைப் பறிக்கும் பயத்தை முதலில் அடித்துவிரட்டு
உயிர்க்குமொரு திமிரை உடம்புள் செறிந்து நிரப்பு
உன்னால் ஆனது உலகு, உன்னால்
எல்லாமாகும் நம்பு;
 
இப்பிரபஞ்சமெங்கும்
நிறைந்துக்கொள்
மரணத்திற்கு அடங்காத வாழ்வின்
கடைசிமூச்சை எடுத்துக்கொண்டு
ஒவ்வொரு அருகாமை மனிதரையும் தேடி ஓடு;
நீ பிணமல்ல என்று காட்டு;
 
இழுப்பதும் விடுவதும்
உன்னால் முடியும்போதே
திமிறி எழு;
ஒரு தீப்பிழம்பென மீண்டெழுந்து வா;
இந்த வாழ்க்கை
எல்லோருக்கும் பாடமாகட்டும்
வெற்று மரணமாக வேண்டாம் கேள்;
 
மாயும் மனிதர்களை
மருந்தும் காக்கவில்லை
மரணமும் தீண்டவில்லை; பயத்தில் மடிகிறார்கள்
பயம் ஓருயிரைக் கொல்லுமெனில்
நம்பிக்கை ஏன் ஒரு உயிரைத் தேற்றாதா?
நம்பிக்கை ஒரு உயிரைக் காக்காதா?
 
அவன்
அவள்
எல்லாம் சேர்ந்து தான் நாம்
அது பாசத்தால் நெய்த வலை; ஆனால்
உயிர்க்குத் தெரிந்தது ஒன்று தான்; அது நீ;
அந்த நீ நினைத்தாலன்றி
இனி நமக்கு விடியலில்லை;
 
உன்னால் முடியும்
சாகமுடிபவர்களுக்கு வாழ முடியாதா யென்ன?
முடியும்.
ஒரு துளி காற்று;
ஒரு துளி நம்பிக்கை;
ஒரு துளி வேகம் மனதிற்குள் நிரப்பிக் கொண்டெழு;
 
துளித் துளியாய்
நம்மை நாம் சேர்த்துச் சேர்த்து
தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா;
வீழ்வது மரணம்’ அது எல்லோராலும் இயலும்
வாழ்வதே நீ; அது உன்னால் மட்டுமே முடியும்; வாழ்ந்துகாட்டு!!
———————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உயிர்க் காற்று and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s